திடீர் என தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் அர்ஜுன்... இது தான் விஷயமா?

Published : Jun 29, 2021, 03:14 PM IST
திடீர் என தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் அர்ஜுன்... இது தான் விஷயமா?

சுருக்கம்

தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன், தமிழக முதல்வரை திடீர் என சந்தித்து பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது.  

தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன், தமிழக முதல்வரை திடீர் என சந்தித்து பேசிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழக முதல்வராக பதவியேற்ற போதில் இருந்தே தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் பிரபலங்கள், மற்றும் தொழிலதிபர்கள் என பலர் மரியாதை நிமித்தமாகவும், தமிழக முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு நிவாரண தொகை கொடுக்கவும் அடிக்கடி சந்தித்து வருகிறார்கள். முதல்வர் மற்ற பணிகளில் வேலை நிமித்தமாக இருந்தால், நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நிதி கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் திடீர் என்று தமிழக முதல்வரை ஆக்ஷன் கிங் அர்ஜுன் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், இது மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு என்றும், கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் காரணமாக... தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த பின்னர் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது முக ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களுடன் ஆக்சன் கிங் அர்ஜுன் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அர்ஜூன் தற்போது 'மேதாவி' மற்றும் 'ஃப்ரெண்ட்ஷிப்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்