மனோஜ் பாரதிராஜா இயக்கும் மார்கழி திங்கள் படப்பிடிப்பில் விபத்து! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்!

By manimegalai a  |  First Published May 31, 2023, 12:11 AM IST

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் இயக்கும், 'மார்கழி திங்கள்' படப்பிடிப்பில் இயற்கை சீற்றத்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டதாக, இப்படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன் வேதனையோடு பகிர்ந்துள்ளார்.
 


பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜா, தமிழில் தாஜ்மஹால் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து அல்லி அர்ஜுனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘ஈரநிலம்’, ‘சமுத்திரம்’, போன்ற சில படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்த இவர், சரியான பட வாய்ப்புகள் அமையாததால் திரைப்படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், சமீப காலமாக குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தார்.

இதை தொடர்ந்து,  தற்போது தன்னுடைய தந்தையை போலவே திரைப்பட இயக்கத்தை கையில் எடுத்துள்ளார். இவர் இயக்கும் முதல் படத்திற்கு மார்கழி திங்கள் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா மிகவும் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் சுசீந்திரன், தன்னுடைய வெண்ணிலா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் முதல் பார்வை, கடந்த மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கிராமத்து கதைகளத்துடன் உருவாக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், எதிர்பாராத இயற்கை சீற்றத்தால் படப்பிடிப்பில் விபத்து நேர்ந்ததாக தற்போது இப்படத்தின் தயாரிப்பாளரான சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

Throwback: யோகி பாபுவுக்கு.. தல தோனியிடம் இருந்து வந்த சர்பிரைஸ் கிப்ட்! CSK வெற்றியால் வைரலாகும் வீடியோ!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்... இன்று மார்கழி திங்கள் படத்தின் படப்பிடிப்பு பழனிக்கு பக்கத்தில் உள்ள கணக்கம்பட்டி என்கிற கிராமத்தில் இருக்கும் காட்டு கோவிலில் படபிடிப்பு நடத்தினோம். அந்த இடத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்த பின்னர், மக்காச்சோளம் காட்டுக்கு நடுவே பெரிய கோடாலி லைட் எல்லாம் செட் பண்ணி, படபிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக, இடி மின்னலுடன் பயங்கரமான காற்று மழை அடித்ததால், அனைவருமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய் நின்றுவிட்டோம். 

19 வயதில்.. கவர்ச்சி ரணகளம் பண்ணும் கீர்த்தி ஷெட்டி!

அங்கு படபிடிப்புக்காக வைத்திருந்த கோடாலி லைட்டுகள் எல்லாமே கீழே விழுந்து நொறுங்கி விட்டது. அதேபோல் ஒரு லைட் மீது இடியே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ஐந்து லைட் மேன் உயிர் தப்பினார்கள் என கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து அடுத்த வார்த்தை பேச முடியாமல், வேதனையில் சுசீந்திரன் ஒரு நிமிடம் நிறுத்திவிட்டார். மேலும் இந்த கஷ்டமான சூழ்நிலையில் படக்குழுவினர் அனைவரும் உறுதுணையாக இருந்ததாக கூறியுள்ளார். 

திடீர் என காதலனை அறிமுகப்படுத்த சொன்ன பிரபலம்! காதல் ஆசையை வெளிபடையாக கூறிய குக் வித் கோமாளி சிவாங்கி!

சுசீந்திரனின் வீடியோ மற்றும் புயல் சீற்றத்தில் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Lightning struck sets near Palani today. Team escaped unhurt,but equipment damaged. thanks crew members for immense support pic.twitter.com/XfNOAhkj2h

— Nikil Murukan (@onlynikil)

 

click me!