
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன் தன்னை ஒரு ஜல்லிக்கட்டு போராளி என நிலைநிறுத்திக்கொண்டவர் செவிலியரான ஜூலினா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட போது, தான் கேமரா முன் தோன்றுவது இது தான் முதல் முறை என்றும். இதற்கு முன் கேமரா முன் தோன்ற வாய்ப்புகள் தனக்கு அமைய வில்லை என கூறினார்.
மேலும் தான் நேசிப்பது தன்னுடைய செவிலியர் வேலையை மட்டும் தான் என கூறி இருந்தார். ஜூலி கூறுவது பொய் என்று நிரூபிக்கும் விதத்தில் அவரை பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆம் ஜூலி ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்கு முன்பே ஒரு சில அல்பங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ஆடி பாடியுள்ள "பாண்டிச்சேரி ஆல்பம் சாங்" ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த விடியோவை பார்த்த பலர், இது போன்ற ஆல்பம் பாடல்களில் ஜூலி நடித்திருப்பது அவருடைய திறமைகளை வெளிப்படுத்துவதாக தான் அமைந்துள்ளது. ஆனால் இதற்காக ஏன் பொய் கூற வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்கனவே ஜூலி பிக் பாஸ் குடும்பத்தில் ஓவருவரை பற்றி மற்றொருவரிடம் கோள் மூட்டி வருவதாக கூறப்படும் நிலையில். தற்போது பொய் புளுவியாகவும் பலர் கண்களுக்கு தெரிகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.