நேற்று மும்பையில் நடந்த 'தி கிரே மேன்' பிரீமியர் ஷோவை தவற விட்ட, அமீர் கான் தனுஷ் - ரூஸோ சகோதரர்கள் மற்றும் படக்குழுவினருக்கு பிரமாண்ட விருந்து வைத்து கௌரவித்துள்ளார்.
நேற்று மும்பையில் நடந்த 'தி கிரே மேன்' பிரீமியர் ஷோவை தவற விட்ட, அமீர் கான் தனுஷ் - ரூஸோ சகோதரர்கள் மற்றும் படக்குழுவினருக்கு பிரமாண்ட விருந்து வைத்து கௌரவித்துள்ளார்.
ஹாலிவுட் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ், தற்போது தனுஷ் நடித்திருக்கும் 'தி கிரே மேன்' படத்தை விளம்பரப்படுத்த இந்தியா வந்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தில் தனுஷ் ஆக்ஷனில் மிரட்டும் டீசர் ஒன்றை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ள நிலையில் 'தி கிரே மேன்' பட புரோமோஷனுக்காக மும்பை வந்துள்ள பட குழுவினர், நேற்று பாலிவுட்டில் இருக்கும் முக்கிய பிரபலங்களுக்கு பிரீமியர் ஷோவுக்காக அழைப்பு விடுத்திருந்தனர்.
மேலும் செய்திகள்: சினிமாவை மிஞ்சிய ரொமான்ஸ்... கடற்கரையில் காதல் பொங்க பொங்க போட்டோ ஷூட் நடத்திய நயன் - விக்கி! போட்டோஸ்
நடிகர் அமீர் கானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அமீர் கான் தற்போது அவரது வரவிருக்கும் திரைப்படமான 'லால் சிங் சத்தா' படத்தின் பணிகளில் பிசியாக இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. 'தி கிரே மேன்' பிரீமியர் ஷோவை தவற விட்டாலும், படக்குழுவினருக்கு இரவு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.
இந்த விருந்தில் அமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் உட்பட 'தி கிரே மேன்' படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். நடிகர் தனுஷை தவிர மற்ற அனைவரும் ஹாலிவுட் திரையுலகை சேர்ந்தவர்கள் என்பதால் விருந்தினர்களுக்கு ஒரு பாரம்பரிய குஜராத்தி உணவு வகைகளை வழங்க, குஜராத்தி உணவு சமைப்பதில் நிபுணத்துவம் பெற்ற சமையல் கலைஞர்களை மும்பைக்கு விமானம் மூலம் அழைத்து வந்து இந்த தனித்துவமான விருந்தை அவர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: அடங்காத மாளவிகா மோகனன்... குட்டை உடை கவர்ச்சியில் அதிகரித்து கொண்டே செல்லும் கிளாமர் அட்ராசிட்டி!
குறிப்பாக இதில் சூரத்தைச் சேர்ந்த பாபட் லுவா படோடி, டுவர் லிஃபாஃபா மற்றும் கந்த் பூரி தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சமையல்காரரும், சுரேந்திரநகரைச் சேர்ந்த ஃபஃப்டா மற்றும் ஜிலேபிக்கு சிறந்த சமையல்காரரும், சுடர்ஃபெனிக்காக காம்பாட்டில் இருந்து சில சமையல் காரர்களும் வந்துள்ளனர். அமீர் கான் கொடுத்த இந்த பிரமாண்ட இரவு விருந்தில் ஏஞ்சலா ரூசோ, அந்தோனி ரூசோ, தனுஷ், ஜோ ரூசோ, மோனிகா ஷெர்கில் மற்றும் ஆன் ரூசோ ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெட்பிளிக்ஸ்! குஷியான ரசிகர்கள்!
அமீர் கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.வெளியாக உள்ளது. இந்த படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கரீனா கபூர் கான் மற்றும் நாக சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.