
சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கை துறையை சேர்ந்த பயில்வான் ரங்கநாதன், தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். இவர் வடிவேலுடன் இணைந்து பல்வேறு காமெடி கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். அதேபோன்று இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.
பெண் நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள்:
சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து பதிவிடுவார். அந்த வகையில், சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் இவர், தனக்கென ஒரு யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி சினிமாவில் நடக்கும் பல்வேறு கிசு கிசு தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
முன்னணி நடிகர்கள் பற்றிய அவதூறு பேச்சு:
இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். குறிப்பாக, இசையமைப்பாளர் ரகுமான் குடும்பம், நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவகாரத்து, சிம்பு, கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்களின் அந்தரங்கத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், எப்படி நடிகர்களுக்கு விவாகரத்து ஆனது, நடிகைகளுக்கு படத்தில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்தும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.
பயில்வான் ரங்கநாதன் மீது போலீசில் புகார்:
பயில்வான் ரங்கநாதன், குறிப்பாக பெண் நடிகைகள் குறித்து நிறைய கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினிமா துறையில் பலர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திவ்யா என்பவரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் விரைவில் கைதாகிறாரா? என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.