Rahman: இந்தி மொழி திணிப்புக்கு எதிராக புகைப்படம் பதிவிட்ட ஏர்.ஆர்.ரகுமான்! அமித் ஷாவிற்கு தக்க பதிலடியா ?

By Anu KanFirst Published Apr 9, 2022, 11:39 AM IST
Highlights

A. R. Rahman: இந்தி மொழி தொடர்பான சர்ச்சைக்கு எதிராக,பாரதிதாசன் வரிகளுடன் புகைப்படம் பதிவிட்ட ஏர்.ஆர்.ரகுமானின், லேட்டஸ்ட் ட்விட்டர் பதிவு பேசு பொருளாகியுள்ளது. 

இந்தி மொழி தொடர்பான சர்ச்சைக்கு எதிராக,பாரதிதாசன் வரிகளுடன் புகைப்படம் பதிவிட்ட ஏர்.ஆர்.ரகுமானின், லேட்டஸ்ட் ட்விட்டர் பதிவு பேசு பொருளாகியுள்ளது. 

 இரண்டு ஆஸ்கர் விருது:

உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக வலம் வரும்,  ஏர்.ஆர்.ரகுமான் தனது முதல் திரைப்படத்திலே, தேசிய விருது பெற்றார். அதன் பிறகு  தமிழ், மலையாளம், இந்தி படங்களுக்கு மட்டுமின்றி, ஆங்கிலம், சீன மொழி படங்களுக்கும் இசையமைத்து சாதனை படைத்துள்ளார். 

மேலும், ஹிந்தி திரைப்படமான ''SLUMDOG MILLIONAIRE'' திரைப்படத்திற்கு  இசையமைத்ததற்காக உயரிய விருதான ஆஸ்கார் விருதை வென்றார். இதையடுத்து,  இவர் இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றவர்.  

தமிழ் மீது கொண்ட தீராத காதல்:

சினிமா திரையில்,  27 வருடங்களுக்கும் மேலாக இசையமைப்பாளராக வலம் வரும் ரஹ்மான்,  தமிழ் மீது தீராத அன்பும், பற்றும் கொண்டவர்.  தன்னுடைய தமிழன் என்ற அடையாளத்தை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல், பல மேடைகளில் தமிழுக்காக குரல் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, தமிழ் தெரியாத இடங்களிலும் இவர் தன் தாய்மொழி தமிழில் பேசி இருக்கிறார். அதோடு வட இந்தியா விருது வழங்கும் விழாக்கள் பலவற்றில் ஏ ஆர் ரகுமான் தமிழில் தான் பேசி இருக்கிறார்.

அமித் ஷாவின் இந்தி திணிப்பு:

சமீபத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் ஹிந்தியில் மட்டுமே நடைபெறுவதாக தெரிவித்த அவர், அனைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொது மொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்துகளுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்ட புகைப்படம்:

தமிழர் பிரச்சனை பலவற்றில் குரல் கொடுக்கும், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.  அந்த புகைப்படத்துக்கு கீழே பாரதிதாசனின் ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்' என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

 

இந்தி மொழி சர்ச்சை எழுந்திருக்கும் இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.இதற்கு முன்னர் CAA உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இது போன்று நாசுக்காக தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருந்தது.

மேலும் படிக்க...Kamal: ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க பச்சை கொடி காட்டிய கமல்...! என்ன காரணம் தெரியுமா..?

click me!