சிரஞ்சீவி வீட்டில் கூடிய 80’ஸ் கிட்ஸ்... செம்ம வைரலாகும் ரீயூனியன் போட்டோஸ்...!

Published : Nov 25, 2019, 02:53 PM IST
சிரஞ்சீவி வீட்டில் கூடிய 80’ஸ் கிட்ஸ்... செம்ம வைரலாகும் ரீயூனியன் போட்டோஸ்...!

சுருக்கம்

எவர் கிரீன் நாயக, நாயகிகள் ஒன்றிணைந்த இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எடுத்துக் கொண்ட விதவிதமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

1980களில் தென்னிந்திய திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய முன்னணி நடிகர், நடிகைகளின் ரீயூனியன் நிகழ்ச்சி மகிழ்ச்சியாக நிறைவடைந்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள மெகா ஸ்டார் சிரஞ்சீவி வீட்டில் நடைபெற்ற பார்ட்டில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியைச் சேர்ந்த 80’ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த ஹீரோ, ஹீரோயின்கள் பங்கேற்றனர். எவர் கிரீன் கதாநாயகிகள், கதாநாயகர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. எவர் கிரீன் நாயக, நாயகிகள் ஒன்றிணைந்த இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எடுத்துக் கொண்ட விதவிதமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதில் சிரஞ்சீவி, மோகன்லால், நாகார்ஜுனா, பாக்யராஜ், வெங்கடேஷ், ஜாக்கி ஷெஃராப், ரமேஷ் அரவிந்த், ரகுமான், குஷ்பூ, சுஹாசினி, ஜெயராம், ராதா, ராதிகா, பூர்ணிமா, அமலா, சரிதா, சரத்குமார், ஷோபனா, நதியா உள்ளிட்டோர் கறுப்பு மற்றும் தங்க நிற உடையில் பங்கேற்றனர். பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கேலி, கிண்டல், நகைச்சுவை, ஆராவாரத்திற்கு பஞ்சம் இல்லை. 

விழாவின் ஏற்பாட்டுகளை மெகா ஸ்டார் சிரஞ்சீவி பொறுப்பு எடுத்து சிறப்பாக செய்திருந்தார். அனைவரும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளில் உற்சாகமாக பங்கேற்றனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான ராம் சரண் அனைவரோடும் செல்ஃபி எடுத்துக் கொண்டார். ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்ச்சியான இது, இந்த முறையும் சிறப்பாக நடைபெற்றது. பழைய நினைவுகளை அசைபோடவும், புது அப்டேட்டுகளை பகிர்ந்து கொள்ளவும் 80’ஸ் நாயக, நாயகிகளுக்கு சிறப்பான வாய்ப்பாக அமைந்தது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!