
பெங்காலி திரையுலகைச் சேர்ந்த 75 வயது, நடிகர் திபாங்கர் தே, 49 வயது நடிகை டோலன் ராய் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஒரே நாளில் திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் திபாங்கர் தே மற்றும் நடிகை டோலன் ராய் ஆகிய இருவருமே பெங்காலி திரையுலகில் மிகவும் பிஸியாக நடித்து வரும் நடிகர்கள்.
கடந்த சில ஆண்டுகளாக லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வரும் இவர்கள், அதனை வெளிப்படையாகவே கூறியுள்ளனர். இந்நிலையில் ஜனவரி 16ஆம் தேதி இந்த தம்பதிகள் தங்களுடைய நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதன் மூலம் திருமணத்திற்கு வயது தடை இல்லை என இருவரும் நிரூபித்தாக இவருடைய ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறிவந்தனர்.
இந்நிலையில் திடீர் என நடிகர் திபாங்கர் தேவிற்கு, ஜனவரி 17 அதாவது நேற்றைய தினம் மூச்சுத்திணறல் ஏற்பட அவரை உடனடியாக மருத்துவ மனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். திருமணம் ஆன ஒரே நாளில், நடிகர் திபாங்கர் தேவிற்கு இப்படி நடந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திபாங்கர் தே, திரைப்படங்கள் மட்டுமின்றி பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பிரபலமானவர். அதே போல் டோலன் ராய்யும் பெண்களை திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.