திருமணம் செய்வதாக கூறி 71 லட்சம் மோசடி..! ஆர்யா வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்... அதிரடி கைது நடவடிக்கை!!

Published : Aug 25, 2021, 10:32 AM ISTUpdated : Aug 25, 2021, 10:34 AM IST
திருமணம் செய்வதாக கூறி 71 லட்சம் மோசடி..! ஆர்யா வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்... அதிரடி கைது நடவடிக்கை!!

சுருக்கம்

நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போது, திடீர் திருப்பமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நடிகர் ஆர்யாவுக்கு எதிரான பண மோசடி புகார் மீதான விசாரணையின் தற்போது, திடீர் திருப்பமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் கொள்வதாக கூறி 71 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஆர்யாவுக்கு எதிராக ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் தரப்பில்  சிபிசிஐடி'யிடம் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டது.  கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடி'க்கு உத்தரவிடக்கோரி விட்ஜா சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த நடிகர் ஆர்யா  தன்னிடம் 71 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். பணத்தை திரும்ப கேட்ட போது, தன்னுடைய வீட்டுக்கடன் அனைத்தையும் செலுத்தி விடுவதாக, நடிகை சாயிஷா பெற்றோர் உறுதியளித்ததால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்ததாகவும், 6 மாதத்தில் விவாகரத்து பெற்று தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக இவர் கூறியது திரையுலகில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்னர் இந்த வழக்கு தொடர்பாக, நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது, நடிகர் ஆர்யா... தன்னால் ஏமாற்றப்பட்டதாக கூறும் பெண்ணை, என்னுடைய பெயரை சொல்லி யாரோ ஏமாற்றி பணம் பெற்றுள்ளனர் அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார். எனவே போலீசார் இந்த வழங்கி வித்தியாசமான கோணத்தில் விசாரணை செய்ய துவங்கினர்.

இந்நிலையில் தற்போது ஜெர்மனியை சேர்ந்த விட்ஜாவை, ஆர்யாவின் பெயரை கூறி, ரூபாய் 71  லட்சம் பணம் பறித்த இருவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான், சமூக வலைத்தளத்தில் தன்னை ஆர்யா என அறிமுகப்படுத்தி கொண்டு அந்த பெண்ணிடம் பேசி வந்ததும்,மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் பறித்தும், இவரது செயலுக்கு உடந்தையாக இருந்த இவரது மைத்துனர் முகமது ஹுசைனி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து நேற்று இவர்களை ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கத்தில் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 மொபைல் போன்,1 லேப்டாப், 1 ஐபேக், மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உற்படுத்தினர் என்பது குறிப்பிடதக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!