Maamanithan : விஜய் சேதுபதியின் மாமனிதன் உட்பட இந்த வாரம் தியேட்டரில் ரிலீசாகும் 5 படங்களின் முழு விவரம்

Published : Jun 23, 2022, 12:03 PM IST
Maamanithan : விஜய் சேதுபதியின் மாமனிதன் உட்பட இந்த வாரம் தியேட்டரில் ரிலீசாகும் 5 படங்களின் முழு விவரம்

சுருக்கம்

Maamanithan : தமிழ் சினிமாவில் நாளை மொத்தம் 5 படங்கள் ரிலீசாக உள்ளது. இவை அனைத்தும் குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள். அவற்றைப்பற்றி தற்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய படங்களின் வருகையால் சிறு பட்ஜெட் படங்களின் வருகை தற்போது குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக வாரந்தோறும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த மாதமும் கமலின் விக்ரம் படம் ஜூன் 3-ந் தேதி ரிலீசானது. இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு சிறு பட்ஜெட் படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை.

இந்நிலையில், இந்த வாரம் சிறு பட்ஜெட் படங்கள் அதிகளவில் ரிலீசாக உள்ளன. நாளை மொத்தம் 5 படங்கள் ரிலீசாக உள்ளது. இவை அனைத்தும் குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள். அவற்றைப்பற்றி தற்போது பார்க்கலாம்.

விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படம் நாளை ரிலீசாக உள்ளது. சீனு ராமசாமி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்து உள்ளனர். இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.

அடுத்ததாக அசோக் செல்வனின் வேழம் படமும் நாளை தான் ரிலீசாக உள்ளது. சந்தீப் ஷாம் இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஜனனி, ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜானு சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதையடுத்து சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாயோன் படமும் நாளை தான் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். கிஷோர் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

அடுத்ததாக சுந்தர் சி, ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் பட்டாம்பூச்சி படமும் நாளை தான் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை பத்ரி இயக்கி உள்ளார். இப்படத்தில் சுந்தர் சி-க்கு ஜோடியாக நடிகை ஹனிரோஸ் நடித்துள்ளார். குஷ்பு இப்படத்தை தயாரித்துள்ளார். இதுதவிர நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கியுள்ள போலாமா ஊர்கோலம் படமும் நாளை தான் ரிலீசாக உள்ளது. இந்த 5 படங்கள் எந்தெந்த படங்கள் வெற்றிவாகை சூடப்போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... சிம்பு பாடிய புல்லட் பாடலை தொடர்ந்து யூடியூப்பில் வைரலாகும் ‘தி வாரியர்’ படத்தின் விசில் பாடல்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!