சிம்பு பாடிய புல்லட் பாடலை தொடர்ந்து யூடியூப்பில் வைரலாகும் ‘தி வாரியர்’ படத்தின் விசில் பாடல்

Published : Jun 23, 2022, 11:15 AM ISTUpdated : Jun 23, 2022, 11:20 AM IST
சிம்பு பாடிய புல்லட் பாடலை தொடர்ந்து யூடியூப்பில் வைரலாகும் ‘தி வாரியர்’ படத்தின் விசில் பாடல்

சுருக்கம்

The warrior movie : தி வாரியர் படத்தின் இரண்டாவது பாடலான விசில் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. ஆண்டனி தாசன் பாடியிருந்த இப்படம் யூடியூப்பில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

மம்முட்டி, அப்பாஸ், முரளி நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு ரிலீசான ஆனந்தம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. முதல் படத்திலேயே வெற்றிகண்ட இவர், ரன், சண்டக்கோழி, பையா என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். 

இதையடுத்து இவர் இயக்கிய வேட்டை, சண்டைக்கோழி 2, அஞ்சான் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன்காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்துவந்த லிங்குசாமி தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து தி வாரியர் படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நடிகர் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ளதால் இப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதன்படி இப்படத்தில் இடம்பெறும் புல்லட் பாடலை சிம்பு பாடியிருந்தார். இப்பாடல் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. இந்நிலையில், தி வாரியர் படத்தின் இரண்டாவது பாடலான விசில் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. ஆண்டனி தாசன் பாடியிருந்த இப்படம் யூடியூப்பில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. டிரெண்டாகி வரும் இப்பாடல் யூடியூப்பில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்...  RJ Balaji : ஆர்.ஜே.பாலாஜி சொன்ன பான் இந்தியா கதை... டபுள் ஓகே சொன்ன விஜய் - ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் இருக்கு!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!