RJ Balaji : ஆர்.ஜே.பாலாஜி சொன்ன பான் இந்தியா கதை... டபுள் ஓகே சொன்ன விஜய் - ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் இருக்கு!

Published : Jun 23, 2022, 10:40 AM IST
RJ Balaji : ஆர்.ஜே.பாலாஜி சொன்ன பான் இந்தியா கதை... டபுள் ஓகே சொன்ன விஜய் - ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் இருக்கு!

சுருக்கம்

RJ Balaji : வீட்ல விசேஷம் படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்துகொண்டு பேசிய ஆர்.ஜே.பாலாஜி நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொன்ன அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 

புகழ்பெற்ற ரேடியோ ஜாக்கியான ஆர்.ஜே.பாலாஜி, சினிமாவில் சில படங்களில் காமெடியனாக நடித்து, பின்னர் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வெற்றிகரமான இயக்குனராகவும் வலம் வருகிறார். அவர் என்.ஜே.சரவணனுடன் சேர்ந்து இயக்கிய மூக்குத்தி அம்மன் மற்றும் சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

நேற்று வீட்ல விசேஷம் படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.ஜே.பாலாஜி நடிகர் விஜய்யை சந்தித்து கதை சொன்ன அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி விஜய் அவர்களுக்கு கதை சொல்ல ஒரு சான்ஸ் கிடைச்சது. அன்று அவர்கூட பேசிய அந்த 2 மணிநேரம் மிகவும் ஸ்பெஷலானது. அவருக்காக நான் இரண்டு மாசமா எழுதிய கதையின் ஒன் லைனை ஒரு 40 நிமிடத்துக்கு சொன்னேன்.

அந்த கதையைக் கேட்டதும் அவருக்கு மிகவும் பிடிச்சிருந்தது. மூக்குத்தி அம்மன் ஸ்டைல்ல ஜாலியான பேமிலி கதையா இருக்கும்னு எதிர்பார்த்தேன், ஆனா இது ஹை ஸ்கேல்ல இருக்கே, ஸ்கிரிப்ட் ரெடி ஆக எவ்வளவு நாள் ஆகும்னு கேட்டார். நான் ஒரு வருஷம் ஆகும் சார்னு சொன்னேன். என்னப்பா ஒரு வருஷமானு ஷாக் ஆனார்.

நாங்க இப்போ வீட்ல விசேஷம்னு ஒரு படம் எடுக்குறோம். அது ரீமேக் படம் தான், ஆனால் அதுக்கே எங்களுக்கு 5 மாசம் ஆச்சு, உங்கள மாதிரி பெரிய ஹீரோஸ் வச்சி பண்ணனும்னா கண்டிப்பா ஒரு வருஷமாச்சு ஆகும்னு சொன்னேன். சரிப்பா அப்புறம் எப்ப வேணாலும் வந்து கதை சொல்லுனு சொன்னாரு. நான் உடனே, எனக்கு எந்த அவசரமும் இல்ல சார் தளபதி 67, இல்லேனா தளபதி 77, அதுவும் இல்லேனா தளபதி 87 பண்றேன்னு சொன்னேன். இதை ஒரு பான் இந்தியா படமாகத் தான் அவரிடம் சொன்னேன்” என ஆர்.ஜே.பாலாஜி கூறினார்.

இதையும் படியுங்கள்... ச்ச... இப்படி பண்ணிட்டாங்களே... 3 போஸ்டர்லையும் அது இல்ல - வாரிசு படக்குழு மீது விஜய் ரசிகர்கள் கடும் அப்செட்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?