Etharkkum Thunindhavan : சூர்யா - சிவகார்த்திகேயன் காம்போ "சர்ப்ரைஸ்..” வெளியாகிறது 3வது சிங்கிள் !!

Published : Jan 14, 2022, 12:09 PM ISTUpdated : Jan 14, 2022, 12:14 PM IST
Etharkkum Thunindhavan : சூர்யா - சிவகார்த்திகேயன் காம்போ "சர்ப்ரைஸ்..” வெளியாகிறது 3வது சிங்கிள் !!

சுருக்கம்

நடிகர் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் 3வது சிங்கிள் தற்போது  அப்டேட் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்  என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'எதற்கும் துணிந்தவன்'.  இப்படத்தில் வினய் ராய் ,பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S. பாஸ்கர்ஜெயப்பிரகாசு, தேவதர்சினி, சுப்பு பஞ்சு அருணாச்சலம், இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.  

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியானது.  இப்பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுத, G.V.பிரகாஷ் மற்றும் அனிருத் ஆகியோர் பாடியுள்ளனர்.  "வாடா தம்பி" எனும் இந்த குத்து பாடலில் கிராமத்தான் கெட்டப்பில் சூர்யா மாஸாக ஆடியுள்ளார்.  இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

அடுத்ததாக  இரண்டாவது பாடல் யுகபாரதி எழுத பிரதீப்குமார், வந்தனா ஸ்ரீனிவாசன்,  பிருந்தா மாணிக்கவாசகன் என 3 பாடகர்கள் பாடியுள்ளனர்.  ".உள்ளம் உருகுதையா" எனத் தொடங்கும் இந்த பாடலில் நடிகர் சூர்யா முருகன் வேடத்தில் வருமாறு பாடல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், வரும் ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் ‘சும்மா சுர்ருன்னு வருது’ என்ரு தொடங்கும் இந்த பாடலை எழுதியது சிவகார்த்திகேயன் என்றும், அமரன் மாலிக் மற்றும் நிகிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர் என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே விஜய் உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்களுக்கு பாடல்கள் எழுதி வரும் சிவகார்த்திகேயன் தற்போது சூர்யாவின் படத்திற்கு பாடல் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!