அழுகிய நிலையில் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட36 வயது நடிகரின் உடல்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

Published : Dec 03, 2021, 06:54 PM IST
அழுகிய நிலையில் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட36 வயது நடிகரின் உடல்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

சுருக்கம்

36 வயதே ஆகும் இளம் நடிகர் பிரம்மா மிஸ்ரா தன்னுடைய வீட்டில், அழுகிய நிலயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகினரை பேர் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.  

36 வயதே ஆகும் இளம் நடிகர் பிரம்மா மிஸ்ரா தன்னுடைய வீட்டில், அழுகிய நிலயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகினரை பேர் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இந்தியில் வெளியான 'மிர்சாபூர்' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் பிரம்மா மிஸ்ரா, பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவர் மும்பையில் அவர் தங்கி இருந்த வெர்சோவா என்கிற அடுக்கு மாடி குடியிருப்பில், இருந்து துர்நாற்றம் வீசுவதாக அவருடைய வீட்டில் அருகே இருந்தவர்கள் போலீசில் புகார் கொடுக்கவே, போலீசார் அவரது வீட்டை சோதனையிட்டபோது, பிரம்மா மிஸ்ரா இறந்து அழுகிய நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்: 'ராஜா ராணி' சீரியல் நடிகையுடன் 'பாரதி கண்ணம்மா' நடிகருக்கு டும்.. டும்.. டும்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

 

பின்னர் இவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜூஹூவில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது மரணம் குறித்து வெளியாகியுள்ள தகவலில்... "36 வயதே ஆன பிரம்மா மிஸ்ரா மாரடைப்பால் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் நவம்பர் 29 ஆம் தேதி, மருத்துவரிடம் நெஞ்சுவலிக்காக சென்றுள்ளார். அதற்காக மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளையும் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: Poonam Bajwa: ஸ்டக்ச்சரை ஸ்கெச் போட்டு காட்டும் ஓவர் டைட் உடையில் பூனம் பாஜ்வா! சூடேற்றும் செம்ம ஹாட் போட்டோஸ்

 

பின்னர் பாத்ரூம் சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு இவர் உயிரிழந்துள்ளார். வீடு பூட்டியே இருந்ததால் அக்கம் பக்கத்தினரும் பெரிதாக அதை கண்டுகொள்ள வில்லை. மூன்று நாட்களுக்கு பின்னர் இவருடைய அறையில் இருந்து துர்நாற்றம் வீசவே... போலீசில் புகார் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது தான் பிரம்மா மிஸ்ரா அழுகிய நிலையில் குளியல் அறையில் கிடந்துள்ளார். பின்னர் அவரது உடல் கைப்பற்ற பட்டு அவரது உறவினர்களுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மா மிஸ்ரா சுமார் நான்கு ஆண்டுகளாக அந்த குடியிருப்பில்  வாடகைக்கு தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: Amala Paul: பிங்க் நிற சேலையில்.. முந்தானையை காற்றில் பறக்கவிட்டு கவர்ச்சி காட்டிய அமலா பால்! லேட்டஸ்ட் கிளிக்

தற்போது இவரது திடீர் மறைவு குறித்து அறிந்த, இவருடைய சக நடிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!
சீரியல் நடிகை தற்கொலைக்கான காரணம் என்ன? பின்னணியில் திடுக்கிடும் தகவல்!