பிரபல நடிகையின் 6 கோடி நிலத்தை ஆட்டையை போட முயன்ற 3 பேர் கைது..!

Published : Feb 16, 2021, 04:32 PM IST
பிரபல நடிகையின் 6 கோடி நிலத்தை ஆட்டையை போட முயன்ற 3 பேர் கைது..!

சுருக்கம்

இந்நிலையில் நடிகைக்கு சொந்தமாக அமைந்தகரையில் 3 கிரவுண்ட் நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் 1960 மற்றும் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வாணிஸ்ரீ. சில கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சிவாஜியுடன் வாணிஸ்ரீ நடித்த வசந்த மாளிகை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கே எடுத்துச் சென்றது. பாலாஜி, சி.ஐ.டி. சகுந்தலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் அப்போது வெள்ளிவிழா கொண்டாடியது. 

இந்நிலையில் நடிகைக்கு சொந்தமாக அமைந்தகரையில் 3 கிரவுண்ட் நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகை வாணிஸ்ரீ-யின் ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க இவர்கள் முயன்றுள்ளனர்.  வேறு நபர்களுக்கு நிலத்தை விற்று ரூ.10 லட்சம் பெற்ற தமீம் அன்சாரி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

BigBoss: கவின் கொடுத்த 'மாஸ்' அப்டேட்.! சாண்டியுடன் இணையும் புதிய படம்.. பிக் பாஸ் வீட்டில் பொங்கிய சினிமா பொங்கல்!
Pongal 2026 Box Office: விஜய் படம் வராதது இவருக்குதான் ஜாக்பாட்டா? 2026 பொங்கல் வின்னர் லிஸ்டில் திடீர் திருப்பம்!