'உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம்'... அஜித்தின் அறிக்கைக்கு போஸ்டர் அடித்தால் பதிலளித்த ரசிகர்கள்..!

Published : Feb 16, 2021, 12:30 PM IST
'உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம்'... அஜித்தின் அறிக்கைக்கு போஸ்டர் அடித்தால் பதிலளித்த ரசிகர்கள்..!

சுருக்கம்

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டைக் கேட்டு தல ரசிகர்கள் செய்து வரும் காரியம் எல்லை மீறி சென்றது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டைக் கேட்டு தல ரசிகர்கள் செய்து வரும் காரியம் எல்லை மீறி சென்றது. அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருச்செந்தூர் முருகன், பாரத பிரதமர் மோடி என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்டு கூச்சலிடும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியது அஜித்தை ரசிகர்களே டேமேஜ் செய்யும் நோக்கில் இருந்தது. 

குறிப்பாக பிரதமர் மோடியின் சென்னை வருகையின் போது ரசிகர்கள் செய்த காரியம் தல அஜித்தை வேதனை அடையச் செய்துள்ளது. இந்நிலையில் தல அஜித் தங்களுடைய ரசிகர்களை பொது இடத்தில் கண்ணியத்தை கடைபிடிக்கும் படி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் “என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் "வலிமை" சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல் விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுறை செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். 

உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் அஜித்தின் இந்த அறிக்கைக்கு பல்வேறு ரசிகர்களும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்த நிலையில், "உங்களது வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம்" என அஜித்தின் அறிக்கையுடன் கூடிய போஸ்டர் ஒன்றை அடித்து, வெளியிட்டுள்ளனர் மதுரை ரசிகர்கள். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

S2 E692 Pandiyan Stores 2: "கொலை செய்யக்கூட தயங்கமாட்டேன்!" - தங்கமயில் குடும்பத்தை எச்சரித்த கோமதி!
Actress Shabana : பச்சை சுடிதாரில் பார்ப்பவரை அழகில் கவரும் சீரியல் நடிகை ஷபானா க்யூட் கிளிக்ஸ்.. ப்பா!! என்னா அழகு...