600 கோடி... 2 வருஷம் வட்டி என்னாச்சி? 2500 வெப்சைட் க்ளோஸ்... ரிலீசுக்கு முன்பே அதகளம் பண்ணிய கோர்ட்

Published : Nov 28, 2018, 08:59 PM ISTUpdated : Nov 28, 2018, 09:00 PM IST
600 கோடி... 2 வருஷம் வட்டி என்னாச்சி?  2500 வெப்சைட் க்ளோஸ்... ரிலீசுக்கு முன்பே அதகளம் பண்ணிய கோர்ட்

சுருக்கம்

2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்களில் வெளியிடத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் ‘2.0 படத்தை வெளியிடுவோம்’ என தமிழ் ராக்கர்ஸ் பெயரில் தகவல்கள் உலா வந்தபோது, அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

ஷங்கர் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் இரண்டு வருடமாக கடின உழைப்பை போட்டு, இந்திய சூப்பர்ஸ்டார்களையும், ஆஸ்கார் வின்னர்களை வைத்து தாறுமாறான சயின்ஸ் பிக்ஷன் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். 

போட்ட காசை எடுக்க படாத பாடு படும் நிலையில், புதிய படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு மொத்த வசூலுக்கு சூனியம் வைக்கும் தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டுக்கு ஆப்படிக்கும் விதமாக,  லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படத்தை முறைகேடாக 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.

குறிப்பாக தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம், தன்னுடைய இணையதள முகவரியில் உள்ள எழுத்துகளை மாற்றம் செய்து தொடர்ச்சியாக புதிய படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி  முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, “புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிடக் கூடாது எனப் பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அந்த உத்தரவைச் சுட்டிக்காட்டியே 'தமிழ் ராக்கர்ஸ்' சவால் விட்டுப் புதிய படங்களை வெளியிட்டு வருகிறது” என லைகா நிறுவனம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, ‘இணையதள முகவரியில் மாற்றம் செய்து புதிய படங்களை வெளியிடும் ‘தமிழ் ராக்கர்ஸ்'க்கு சொந்தமான சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்கள் உட்பட 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் 2.0 படத்தை வெளியிடத் தடை விதித்து இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!