
2021ஆம் ஆண்டில் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் குறித்த ரிப்போர்ட்டை ஸ்விகி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், “இந்த ஆண்டு ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் சிக்கன் பிரியாணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணிகளும் ஒரு செகண்டிற்கு 2 பிரியாணிகளும் ஆர்டர் செய்யப்படுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டில் நிமிடத்திற்கு 90 பிரியாணிகள் மட்டுமே ஆர்டர் செய்யப்பட்டன.
இப்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெஜிடபிள் பிரியாணியை பொருத்தவரை சிக்கன் பிரியாணியை விட 4.3 மடங்கு குறைவாக ஆர்டர் செய்யப்பட்டது. கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், லக்னோ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிக்கன் பிரியாணியை மிகவும் விரும்பி ஆர்டர் செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் 60 மில்லியன் சிக்கன் ஆர்டர்கள் ஸ்விகியில் செய்யப்பட்டுள்ளது. இதை ஸ்விகி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது..
இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மட்டும் இதுவரை 2 மில்லியனுக்கு மேற்பட்ட பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக Swiggy, Zomato உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்கள் கூறியுள்ளன.
இந்த செய்தியால் பிரியாணி பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்..ஆனால் தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளை தமிழர்கள் மறந்து விட்டதாகவே தெரிகிறது. இதனால் வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் பிரியாணியை நமது பாரம்பரிய உணவாக நினைக்க கூடும் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.