திடீரென சுவர் ஏறி குதித்து ஷாருக்கான் வீட்டுக்குள் நுழைய முயன்ற 2 பேர் கைது- காரணம் கேட்டு அதிர்ந்துபோன போலீஸ்

By Ganesh A  |  First Published Mar 3, 2023, 10:05 AM IST

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து நுழைய முயன்ற குஜராத்தை சேர்ந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.


பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவரது வீடு மும்பையில் அமைந்ததுள்ளது. மன்னட் என அழைக்கப்படும் அந்த வீட்டில் இரண்டு பேர் சுவர் ஏறி குதித்து நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார், அந்த இரு நபர்களையும் கைது செய்தனர். பின்னர் காவல்நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் அவர்கள் கேட்ட காரணத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து போயினர். அதன்படி அவர்கள் இருவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஷாருக்கானின் தீவிர ரசிகரான அவர்கள், தாங்கள் ஷாருக்கானை சந்திப்பதற்காக தான் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் நுழைய முயன்றதாக தெரிவித்து உள்ளனர். ஆர்வ மிகுதியால் ரசிகர்கள் செய்த இந்த செயலைக் கேட்டு போலீசாரே அதிர்ந்துபோய் உள்ளனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... ஒரு கை செத்துப்போச்சு... என்னை விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க...! கேன்சர் பாதிப்பால் கதறும் அங்காடி தெரு நடிகை

நடிகர் ஷாருக்கானின் மனைவி கெளரி கான் மீது நேற்று லக்னோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது தொழிலதிபர் ஒருவர் தந்த மோசடி புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. விளம்பரத்தில் நடிப்பதற்காக ரூ.86 லட்சம் வாங்கிவிட்டு கெளரிகான் மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கும் ஷாருக்கான் வீட்டில் நுழைய முயன்றவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என்கிற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஷாருக்கான் வீட்டில் நடந்த இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களின் இந்த வரம்புமீறிய செயலுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஷாருக்கான் நடிப்பில் தற்போது ஜவான் மற்றும் டுங்கி ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் ஜவான் படத்தை அட்லீ இயக்குகிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு ஆஸ்கர் குழு அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம்... குவியும் வாழ்த்துக்கள்

click me!