பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா?... நிகழ்ச்சி தள்ளிப்போக வாய்ப்பு...!

Published : Sep 20, 2020, 07:57 PM IST
பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா?... நிகழ்ச்சி தள்ளிப்போக வாய்ப்பு...!

சுருக்கம்

 இதற்கு முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

தமிழில் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும்  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் சீசன்  3  கடந்த ஆண்டு நிறைவடைந்த நிலையில் நான்காவது சீசன் துவங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் நடிகைகள் லட்சுமி மேனன், சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன் ஆகியோர்களும் நடிகர்கள் ரியோ ராஜ், கரன், பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டாலும், இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை.கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த 3 சீசன்களில் வெளியானதை விட பல மாற்றங்கள் இந்த முறை செய்யப்பட்டுள்ளது. ​

அதாவது கடந்த 3 சீசன்களிலும், 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ள 100 நாட்கள் நிகழ்ச்சி நடக்கும். ஆனால் இம்முறை, 12 போட்டியாளர்கள் மற்றும் 80 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன் படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த போட்டியாளர்கள் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் நிகழ்ச்சி தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்படால் என்றும் கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ajith : ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த அஜித்... ஷாலினி தயாரிப்பில் 2 படங்கள் - ஒன்னு டேர் டெவில்; இன்னொன்னு என்ன?
Jason Sanjay: அடிக்கடி சண்டை வரும்; பிரிஞ்ச பிறகுதான் பாசம் வந்துச்சு - தங்கை திவ்யா பற்றி ஜேசன் சஞ்சய் உருக்கம்!