
பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின், முன்னாள் மேனேஜரும், இயக்குனர் சுசீந்திரனின் நண்பருமான
கார்த்திக் என்பவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்ததற்கு, இரங்கல் தெரிவித்து சுசீந்தர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுசீந்திரன். இவர் தமிழில் வென்னிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது நடிகர் ஜெய் நடிக்க உள்ள படத்தை அடுத்ததாக இயக்க உள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய நண்பர் கார்த்திக் குறித்து உருக்கமான ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அவரது நீண்ட கால நண்பரான கார்த்தி மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளதாக மிகவும் வருத்தத்துடன் இதில் தெரிவித்துள்ளார். இவர் பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் முன்னாள் மேனேஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் திரையுலகை சேர்ந்த பலராலும் நன்கு அறியப்பட்டவர் என்பதால்... பலர் சமூக வலைத்தளம் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.