
நேனி எண்டர்டைன்மெண்ட்ஸ் சார்பில் டாக்டர் அமர் இராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடிக்க கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் இராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, காசி விசுவநாதன் மற்றும் எவர்க்ரீன் அற்புதாநந்தம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசேபச்சன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
'வணங்கான்' பட கெட்டப்பில் மிரட்டும் அருண்விஜய்..! சூர்யாவையே மிஞ்சிட்டாரே... வைரலாகும் புகைப்படம்!
நடிகர் ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இன்னும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்றடைந்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு வெளியாகும் அவரது முதல் படம் இது என்பதால் பல ரிஸ்க்கான சாகச காட்சிகளில் கூட டூப் போடாமல் நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ்.
அந்தவகையில் இந்த படத்தில் பூமிக்கு அடியில் 5500 சதுர அடியில் மிகப் பிரமாண்டமான குகை செட் ஒன்றை தென்காசிக்கு அருகில் உள்ள காட்டிற்குள் அமைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்த பெரும்பாலான காட்சிகள் இந்த குகை செட்டில் தான் படமாக்கப்பட்டுள்ளன.
ஜூனியர் NTR அணிந்திருக்கும் இந்த வாட்ச் இத்தனை கோடியா? விலையை கேட்டு வாய்பிளக்கும் ரசிகர்கள்!
குகைக்குள் காற்று தாரளமாக வருவதற்கான வழி இல்லை என்றாலும் மின்விசிறியை பயன்படுத்தினால் படமாக்கப்படும் காட்சிகளின் எதார்த்தத்தை பாதிக்கும் என்பதால் அதை தவிர்த்து விட்டு 35 டிகிரி செல்சியஸ் அனல் பறக்கும் வெப்பத்தில் 22 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 14 மணி நேரத்திற்கு மேல் அந்த வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார் ஜித்தன் ரமேஷ்.
சில சமயங்களில் வெப்பத்தை தாங்கமுடியாமல் தண்ணீரை தன்மேல் இறைத்து சிறிதளவு வெப்பத்தை தணித்துக்கொண்டு அதன்பின்னரும் ஓய்வு கூட எடுக்காமல் தொடர்ந்து நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.