தயாரிப்பாளர் சங்கத்தில் 13 கோடி ஊழல்... எஸ்.வி.சேகர் அதிர்ச்சி பேட்டி..!

By manimegalai aFirst Published Nov 22, 2020, 5:06 PM IST
Highlights

தயாரிப்பாளர் சங்க தேர்தல், பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் இன்று,   நடைபெறுகிறது. அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கிய வாக்குப்பதிவு  மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தல் நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
 

தயாரிப்பாளர் சங்க தேர்தல், பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் இன்று,   நடைபெறுகிறது. அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கிய வாக்குப்பதிவு  மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தல் நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் முரளி, மற்றும் பி.எல்.தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டு வருகிறார்கள். மேலும் துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் பலர் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த தயாரிப்பாளர் சங்க தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய, தற்போதைய உறுப்பினர்கள் 1303 பேர் வாக்களிக்க உள்ளனர். 

இந்நிலையில் இது..  தேர்தல் போலவே தெரியவில்லை என்றும்,  நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வில்லை என்றும், இதனை நீதி அரசர் மற்றும் போலீசார் தலையிட்டு ஒழுங்குமுறை படுத்த வேண்டும் என, மாறி மாறி குறைகூறி வருகிறார்கள் மற்ற அணியை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்து விட்டு வந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரபல நடிகரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான எஸ்.வி.சேகர்,  தமிழக தேர்தலை விட தயாரிப்பாளர் சங்க தேர்தல் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது என கூறினார்.

பின்னர் இங்கு கேள்வி படும் விஷயங்கள் அதிர்ச்சியாக உள்ளது என்றும் ஒரு அணியினர் 35 இன்ச் டிவி தருவதாகவும், மற்றொரு அணி கோல்ட் காயின் தருவதாகவும் கூறி வருவதாக கேள்வி படுகிறேன். அது எதுவும் எனக்கு வரவில்லை, அது போன்ற சலுகைகள் தனக்கு தேவையும் இல்லை. 

யார் இந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றாலும், தயாரிப்பாளர்களின் நலனுக்காக பாடு பட வேண்டும். இதுவரை சுமார் 13  கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. அந்த பணத்தை திருப்பி மீட்டெடுத்து கொண்டு வர வேண்டும். அதிக பிரச்சனைகள் இங்கு நடைபெற்று வருகிறது, எனவே நேர்மையுடன் செயல்படுபவருக்கு அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என எஸ்.வி.சேகர் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!