தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு தங்க காசு... 4 ஆயிரம் பணம்..! சிக்கிய டி.ஆர்..? பரபரக்கும் பிரச்சனை..!

By manimegalai aFirst Published Nov 22, 2020, 3:33 PM IST
Highlights

தயாரிப்பாளர் சங்க தேர்தல், பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் இன்று,   நடைபெறுகிறது. அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவங்கிய வாக்குப்பதிவு  மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தல் நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
 
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் முரளி, மற்றும் பி.எல்.தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டு வருகிறார்கள். மேலும் துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் பலர் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த தயாரிப்பாளர் சங்க தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய, தற்போதைய உறுப்பினர்கள் 1303 பேர் வாக்களிக்க உள்ளனர். 

இந்நிலையில் இது தேர்தல் போலவே தெரியவில்லை என்றும்,  நியாயமான முறையில் தேர்தல் நடைபெற வில்லை என்றும், இதனை நீதி அரசர் மற்றும் போலீசார் தலையிட்டு ஒழுங்குமுறை படுத்த வேண்டும் என, மாறி மாறி குறைகூறி வருகிறார்கள் மற்ற அணியை சேர்ந்தவர்கள்.

குறிப்பாக வாக்காளர்களின் ஓட்டை பெற, லஞ்சம் கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். பணம் கொடுத்து ஜெயிக்க வேண்டும் என்கிற அவலம் நிகழ்ந்து வருவதாகவும், . ஒருவருக்கு 4 ஆயிரம் பணம் மற்றும் கோல்ட் காயின் அன்பளிப்பாக கொடுத்து ஓட்டு வேட்டை நடப்படுவதாக சிலர் டி.ஆர்.அணிமீது குற்றம் சாட்டி வருகிறார்கள்.

அதே நேரத்தில் தேர்தல் அமைதியாக நடைபெறாமல், பல்வேறு பிரச்சனைகளுடன் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

click me!