திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி..! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

Published : Jan 31, 2021, 10:42 AM IST
திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி..! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

சுருக்கம்

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த ஆண்டு, மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள், தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோபர் 15ம் தேதி முதல் இயங்கி வரும் நிலையில், தற்போது 100 சதவீத பார்வையாளர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த ஆண்டு, மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள், தமிழகத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோபர் 15ம் தேதி முதல் இயங்கி வரும் நிலையில், தற்போது 100 சதவீத பார்வையாளர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் முதலே, 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கி வரும் திரையரங்குகளில், 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என, திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். குறிப்பாக பொங்கல் விருந்தாக வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கு  100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. 

இதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக சந்தித்த நடிகர் விஜய், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோல் நடிகர் சிம்புவும் தமிழ் புத்தாண்டிற்குள் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென அறிக்கை வலியுறுத்தினார். 

இதனை ஏற்ற தமிழக அரசு தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு பதிலாக 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என அரசாணை பிறப்பித்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், 100 சதவீத திரையரங்குகளுக்கு அனுமதி தரக்கூடாது என, மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இதனை ஏற்ற தமிழக அரசு, 100 சதவீத பார்வையாளர்களுக்கு கொடுத்த அனுமதியை திரும்ப பெற்றது. 'மாஸ்டர்', மற்றும் 'ஈஸ்வரன்' படங்களுக்கு 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க பட்டாலும், பாக்ஸ் ஆபீஸ் காலக்ஷன் களைகட்டியது. குறிப்பாக 'மாஸ்டர்' திரைப்படம் 200 கோடி வசூல் சாதனை செய்ததாக தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் தற்போது, வருகிற பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல்.... நாடு முழுவதும் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்க படுவார்கள் என, திரையரங்குகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது, திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், என அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!