கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம் இதோ

By Thanalakshmi VFirst Published Sep 10, 2022, 11:43 AM IST
Highlights

தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு வருகிற இன்று முதல் 26 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கு 517 இடங்கள் உள்ளன.  சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம், தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி, வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 

பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் இங்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்.சி-ஏ.எச்) மொத்தமாக 580 இடங்கள் இருக்கின்றன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன.  இதே போல் உணவு, கோழியின, பால்வளத் தொழில்நுட்ப படிப்புகளுக்கு 96 இடங்கள் உள்ளன. 

மேலும் படிக்க:பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்.. எப்போது வரை நடைபெறுகிறது..? ஆன்லைனில் மேற்கொள்ளுவது எப்படி..? விவரம் இதோ

அதில் திருவள்ளூர் உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் உள்ளன. உணவுத் தொழில் நுட்ப பட்டப்படிப்புக்கான (பி.டெக்) 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் 4 ஆண்டுகள் படிப்புக் கொண்ட கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள்உள்ளன. 

இந்நிலையில் தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு வருகிற இன்று முதல் 26 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”  பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 - 23-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் இன்று முதல் 26-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க:தமிழ்நாட்டில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல்.. எவ்வளவு அதிகரித்துள்ளது தெரியுமா?

அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர்களுக்கான இடஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விபரங்களையும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!