ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. விவரம் இதோ..

By Thanalakshmi V  |  First Published Sep 9, 2022, 4:55 PM IST

PDIL இந்தியா நிறுவனமானது காலியா உள்ள பொறியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. 
 


நிறுவனத்தின் பெயர்: ப்ராஜெக்ட்ஸ் அண்ட் டெவலப்மென்ட் இந்தியா லிமிடெட் (PDIL)  

காலி பணியிடங்கள்: 10

Tap to resize

Latest Videos

பணியின் பெயர்: Engineer

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர் வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

PDIL இந்தியா லிமிடெட்யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு  pdilin.com சென்று ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஒபிசி பிரிவினர் விண்ணப்பிக்கும் போது கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி/ EWS பிரிவினர் ரூ. 400 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க:தேர்வர்களே!! காவலர் பணிக்கான எழுத்துதேர்விற்கு கட்டணமில்லா இலவச பயிற்சி..எப்படி விண்ணப்பிப்பது..? விவரம்

கல்வித் தகுதி: 

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Civil/ Structural இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 க்குள் இருத்தல் வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வயது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC, ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாதம் ரூ.51,800 ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் படிக்க:பெல் நிறுவனத்தில் வேலை.. பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. நாளை தான் கடைசி தேதி..
 

click me!