மத்திர அரசு நிறுவனமான பெல் நிறுவனத்தில் காலியாக பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: பெல் நிறுவனம்
காலி பணியிடங்கள்: 6
பணியின் பெயர்: Sr. Assistant Engineer-I
விண்ணப்பிக்க கடைசி தேதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி. அதற்குள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
பெல் நிறுவனத்தின் அதிகாரபூர்வ தளத்தில் சென்று விண்ணப்ப படிவம் பதவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தினை கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் படிக்க:படித்த முடித்தவுடன் ஸ்டார் ஹோட்டலில் வேலை.. 100% வேலைவாய்ப்பு பெற்றிட ஏற்பாடு.. தாட்கோ கழகம் முக்கிய அறிவிப்பு
கல்வித்தகுதி:
இப்பணிக்குவிண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் இருந்து தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பை படித்துக் கொள்ளவும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் படிக்க:ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு வெளியானது.. தெரிந்துக் கொள்ளுவது எப்படி..?