
தொழில்நுட்பம் அல்லாத ஆறாம் நிலை பணிகளுக்கான 7,124 ரயில் நிலைய அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை ரயில் வாரியம் வெளியிட்டது. இந்திய ரயில்வே துறையின் பல்வேறு பிரிவுகளில் காலியாக 1.4 லட்சம் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை முன்னதாக ரயில்வே வாரியம் வெளியிட்டது.
இதில், தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளில் அனைத்து நிலைகளுக்கும் ஒரே கட்டமாக முதற்கட்ட தேர்வு கணினி வழியில் நடைபெற்றது. மேலும் நிலை 2,3,4,5,6 என்ற சம்பள நிலைக்கேற்ப தேர்வுகள் தனித்ததனியாக நடத்தப்பட்டன. இதனிடையே நிலை 6 -ல் ரயில் நிலைய அதிகாரி (Station Masters) பதவிக்கான 7,124 காலிப்பணியிடங்களுக்கு, கடந்த மே மாதம் 9,10 ஆகிய தேதிகளில் இரண்டாவது நிலை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 25 மாநிலங்களில் 111 நகரங்களில் 156 மையங்களில் நிலை 6 தேர்வு நடத்தப்பட்டது.
மேலும் படிக்க:பொதுத்துறை நிறுவனத்தில் வேலை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்..
கடந்த ஜூன் மாதத்தில் இரண்டாவது நிலை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்வில் 57,117 தேர்வர்கள் தேர்ச்சி பெற்று, கணினி திறனறிவு தேர்வுவில் தகுதி பெற்றுள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் கடந்த ஜுலை 30ம் தேதி ரயில் அதிகாரி பணிக்கான (Station Masters) கணினி திறணறிவு தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் இந்த தேர்வில் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களது www.rrbchennai.gov.in/ என்ற அதிகார இணையதளத்தில் சென்று தெரிந்துக் கொள்ளலாம். இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வு மற்றும் கணினி திறனறிவுத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். தற்போது இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அசல் சான்றிதழ் சரிப்பரப்புக்கு அழைக்கப்படுவர். அதன் பிறகு, மருத்துவ பரிசோதனைக்கு நடத்தபடும்.
மேலும் படிக்க:தேர்வர்களே!! காவலர் பணிக்கான எழுத்துதேர்விற்கு கட்டணமில்லா இலவச பயிற்சி..எப்படி விண்ணப்பிப்பது..? விவரம்