மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலி பணியிடங்கள்:
மொத்த காலி பணியிடங்கள் : 37
பணியின் பெயர்:
Assistant Director, Deputy Director, Scientific Officer, Photographic Officer, Senior Photographic Officer, Junior Scientific Officer, Junior Scientific Officer, Senior Grade of Indian Information Service, Principal, Director &Executive Engineer ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பிக்கும் தேதி:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி. கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பதிவு நாளையுடன் முடிவடைகிறது.
மேலும் படிக்க:சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது.. முடிவுகளை தெரிந்துக் கொள்ளுவது எப்படி..?
விண்ணப்பிக்கும் முறை:
https://upsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் காலி பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
முதலில் UPSC-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான upsconline.nic.in க்கு செல்ல வேண்டும்.
பின்னர், "ONLINE RECRUITMENT APPLICATION (ORA) FOR VARIOUS RECRUITMENT POSTS." என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
ஒரு புதிய பக்கம் திரையில் தெரியும். அதில் விண்ணப்பத்தாரர்கள் விரும்பிய பணியை தேர்ந்தெடுக்கவும்.
குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாக படித்துவிட்டு, பதிவு செயல்முறையை முடிக்க வேண்டும்.
பின்னர், விண்ணப்ப செயல்முறையைத் தொடர வேண்டும்.
அதன் பின்பு தான், அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பத்தாரர்கள் ரூ.25 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுதிறனாளி மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. Gen/OBC/EWS ஆண் விண்ணப்பத் தாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க:ரூ. 35,000 சம்பளத்தில் திருச்சி NIT யில் சூப்பர் வேலை.. பி.இ., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்
கல்வித்தகுதி:
கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு கல்வித்தகுதி மாறுப்படுவதால், அறிவிப்பினை பார்த்துக்கொள்ளலாம்.
ஆட்சேப்பு அறிவிப்பு லிங்க்:
https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php
விண்ணப்ப படிவத்திற்கான லிங்க்:
https://upsc.gov.in/sites/default/files/Advt-No-15-2022-engl-120822_0.pdf