
திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள்:
மொத்த காலி பணியிடங்கள்: 4
பணியின் பெயர்: Senior Research Fellow
கல்வி தகுதி:
Mechanical, Production, Manufacturing Technology, CAD, CAM, Electrical, Electronics, Mechanical, Metallurgical and Meterial Science, Aero, Thermal உள்ளிட்டு ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
மேல் குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 28க்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?
விண்ணப்பிக்கும் தேதி:
வரும் 16 ஆம் தேதிக்குள் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
முதலில் www.nitt.edu.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதவிறக்கம் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.
பின் drdosrfnit@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.
சம்பள விவரம்:
காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.35,000 ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் நபர்களில் நேர்முக தேர்வின் அடிப்படையில் பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
மேலும் படிக்க:கவனத்திற்கு!! முதுநிலை பட்டத்தாரி ஆசிரியர் நியமனம்.. சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது தெரியுமா..?