கவனத்திற்கு!! முதுநிலை பட்டத்தாரி ஆசிரியர் நியமனம்.. சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது தெரியுமா..?

By Thanalakshmi V  |  First Published Aug 31, 2022, 6:45 AM IST

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நேரடியாக நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அப்போது கைப்பேசி, பைகள் உள்ளிட்ட பொருள்கள் எடுத்து வர அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் நிகழாண்டில் 2,955 காலி பணியிடங்களும், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள 251 பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,” முதுநிலை ஆசிரியர்‌ பணியிடங்களில்‌ 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்துக்கு இருவர்‌ வீதம்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்‌. இவர்களுக்கான சான்றிதழ்‌ சரிபார்ப்பு செப்‌. 2-ஆம்‌ தேதி முதல்‌ 4- ஆம்‌ தேதி வரையில்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரிய வளாகத்தில்‌ நடைபெறவுள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:TANCET 2023 : டான்செட் தேர்வு தேதி வெளியானது.!! எப்போது தெரியுமா ?

தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள்‌ மற்றும்‌ நேரத்துக்கு 15 நிமிஷங்களுக்கு முன்னர்‌ மட்டுமே ஆசிரியர்‌ தேர்வு வாரிய வளாகத்துக்குள்‌ அனுமதிக்கப்படுவர்‌. சான்றிதழ்‌ சரிபார்ப்புக்கு குறிப்பிட்ட தேதியில்‌ நேரில்‌ வருகை புரியாத விண்ணப்பதார்கள்‌ அவர்கள்‌ தகுதியான மதிப்பெண்‌ பெற்றிருப்பினும்‌, அடுத்தகட்ட பணித்‌ தேர்வுக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்‌.

விண்ணப்பதாரர்கள்‌ ஒரு பணியிடத்திற்கு 2 பேர்‌ வீதம்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவதாலும்‌, அவர்களின்‌ சான்றிதழ்கள்‌, ஆவணங்கள்‌ சரிபார்க்கப்படுவதாலும்‌ மட்டுமே இறுதித்‌ தேர்வுக்கு
உத்தரவாதம்‌ இல்லை. ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ வளாகத்தின்‌ வாசலில்‌ கூட்டமாக சேருவதை தவிர்த்து வளாகத்துக்குள்‌ அமைதி காத்திட வேண்டும்‌.

மேலும் படிக்க:சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?

சான்றிதழ்‌ சரிபார்ப்புக்கு வருவோர்‌ அசல்‌ கல்விச்சான்றிதழ்கள்‌, முன்னுரிமைகோரும்‌ சான்றிதழ்கள்‌, அசல்‌ ஆதார்‌ அட்டை ஆகியவற்றில்‌ ஒரு 'செட்‌' சுய சான்றொப்பம்‌ இட்ட நகல்‌, அழைப்புக்கடிதம்‌, மற்றும்‌
விண்ணப்ப நகல்‌ ஆகியவற்றை தவறாமல்‌ கொண்டு வர வேண்டும்‌. கைப்பேசிகள்‌, பைகள்‌ உள்ளிட்ட பொருள்கள்‌ கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டாது. வளாகத்துக்குள்‌ பெற்றோர்கள்‌, சிறார்கள்‌ மற்றும்‌ உறவினர்களை அழைத்து வரக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:டிஎன்பிஎஸ்சி தேர்வில் இதற்கு அனுமதி இல்லையா..? உடனே திருத்தம் செய்ய வேண்டும்... அலறி துடிக்கும் அதிமுக

click me!