தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை அல்லது நீட் UG (NEET UG 2022) விடைக்குறிப்பு மற்றும் முடிவுக்கான வெளியீட்டு தேதியை தேசிய தேர்வு முகமை (NTA) சமீபத்தில் அறிவித்தது.
2022-23-ம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தகுதித் தேர்வான ‘நீட்’ தேர்வு ஜூலை 17 ம் தேதி அன்று நடத்தப்பட்டது. வழக்கம் போல், இந்த ஆண்டும் நீட் தேர்வு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையில் நடத்தப்பட்டது, தேர்வர்களுக்கு அனைத்து அறிவுறுத்தல்களும் முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !!
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு இளங்கலை அல்லது நீட் UG (NEET UG 2022) விடைக்குறிப்பு மற்றும் முடிவுக்கான வெளியீட்டு தேதியை தேசிய தேர்வு முகமை (NTA) சமீபத்தில் அறிவித்தது. ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்குள் NEET UG விடைக்குறிப்பு வெளியிடப்படும் எனவும், NEET UG தேர்வு முடிவு 2022 செப்டம்பர் 07, 2022-க்குள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நீட் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்படுகிறது.
Nta.ac.in, neet.nta.nic.in என்ற 2 இணையதளங்கள் மூலமாக தேர்வர்கள் நீட் தேர்வுக்கான விடைக்குறிப்பை சரிபார்க்கலாம். நீட் 2022 தாளின் அனைத்து தொகுப்புகளுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்படும். விடைக்குறிப்புடன், விண்ணப்பதாரர்களின் ஓஎம்ஆர் ரெஸ்பான்ஸ் ஷீட்டும் வழங்கப்படும். விடைத்தாள் மீது ஆட்சேபனைகளை தெரிவிக்க விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மாணவர்களின் ஆட்சேபனைகளை பரிசீலித்த பின் இறுதி விடைத்தாள் வெளியிடப்படும்.
மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !
இறுதி விடையின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் அமையும். ப்ரோவிஜனல் ஆன்சேர் கீக்கான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய, மாணவர்கள் ஒரு விடைக்கு ரூ.200 செலுத்த வேண்டும்.நீட் யுஜி தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் செப்டம்பர் 7 ஆம் தேதி தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் முடிவைப் பதிவிறக்கம் செய்ய அவர்களின் தேர்வுப் பட்டியல் எண் மற்றும் பிறந்த தேதி தேவைப்படும். இதன் உதவியுடன், அவர்கள் தங்கள் மதிப்பெண்ணை சரிபார்க்க முடியும்.
மேலும் செய்திகளுக்கு..டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு