5 நாட்களே உள்ளது...! விண்ணப்பித்து விட்டீர்களா..? 323 தட்டச்சு, சுருக்கெழுத்தர் பணிக்கு ஆட்கள் தேர்வு

Published : Sep 01, 2022, 10:02 AM IST
5 நாட்களே உள்ளது...! விண்ணப்பித்து விட்டீர்களா..? 323 தட்டச்சு, சுருக்கெழுத்தர் பணிக்கு ஆட்கள் தேர்வு

சுருக்கம்

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்  எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 323 தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பணிகளுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 6 ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

தட்டச்சு பணிக்கு அறிவிப்பு

மத்திய மற்றும் மாநில அரசு பணிகளில் காலயாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 323 தட்டச்சு. சுருக்கெழுத்தர் பணியிடங்ளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

TANCET 2023 : டான்செட் தேர்வு தேதி வெளியானது.!! எப்போது தெரியுமா ?

என்ன தகுதி வேண்டும்..? 

Stenographer பணிக்கு 11 இடங்கள் தேர்வு செய்யப்படவுள்ளது.  மாதம் ரூ.29,200 - 92,300 வரை சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதி அதனை நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Head Constable பணிக்கு 312 இடங்கள் தேர்வு செய்யப்படவுள்ளது. மாதம் சம்பளம் ரூ.25,500-81,100வரை வழங்கப்படும் வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  மேலும்  பிஎஸ்எப் -ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனைகள், தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய அலுமினியம் நிறுவனத்தில் காலிபணியிடங்கள் அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி? ஊதியம் எவ்வளவு?

செப்டம்பர் 6 ஆம் தேதி கடைசி நாள்

ஆர்வமுள்ளவர்கள் செப்டம்பர் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  www.rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேவைக் கட்டணமாக ரூ.40 மட்டும் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

கவனத்திற்கு!! முதுநிலை பட்டத்தாரி ஆசிரியர் நியமனம்.. சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது தெரியுமா..?
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now