
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் 24 ஆம் தேதி வரை பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்:
Chennai Metro Rail Limited (CMRL)
காலி பணியிடங்கள்:
மொத்த காலி பணியிடங்கள்: 3
பணியின் பெயர்:
தற்போது CMRL யில் காலியாக உள்ள GM, JGM & DGM ஆகிய மூன்று இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு வரும் 24 ஆம் தேதிக்கும் விண்ணப்பித்திருக்க வேண்டும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதவிறக்கம் செய்ய வேண்டும்
பின் படிவத்தினை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க:ரூ. 35,000 சம்பளத்தில் திருச்சி NIT யில் சூப்பர் வேலை.. பி.இ., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்
விண்ணப்பக்கட்டணம்:
காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.300 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் மட்டும் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
GM (General Manager) பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிந்தால் போதும்.
JGM & DGM ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பத்தாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது :
GM பதவிக்கும் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயதானது 55 ஆக இருக்க வேண்டும். அதே போல் JGM (Design) பணிக்கு அதிகபட்ச வயதானது 43 ஆகவும் .
DGM (Design) பணிக்கு அதிகபட்ச வயதானது 40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
GM பணிக்கு மாத சம்பளமாக ரூ. 2,25,000 யும் JGM (Design) பதவிக்கு மாதந்தோறும் ரூ.1,25,000 சம்பளமாகவும் DGM (Design) பதவிக்கு ரூ.90,000 சம்பளமாகவும் வழங்கப்படவுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் காலி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் படிக்க:சூப்பர் நியூஸ்.. கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ 1,000 - எப்போது கிடைக்கும் தெரியுமா?