தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பெரம்பலூர் மணடலத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Perambalur Civil Supplies Corporation
காலி பணியிடங்கள் : 28
பணியின் பெயர்:
பட்டியல் எழுத்தர் - 07
உதவுபவர்- 14
காவலர் - 09
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க:டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு.!
அனுப்ப வேண்டிய முகவரி:
துணை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,
துறை மங்கலம்
கல்வித் தகுதி:
பட்டியல் எழுத்தர் : அரசு அல்லது அரசால அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் பி.எஸ்சி (அறிவியல்)/ பி.இ பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவுபவர்: இப்பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியை பெற்றிருக்க வேண்டும்.
காவலர்: 8 ஆம் வகுப்பை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் - 37ஆகவும், பிசி/ எம்பிசி/பிசி(இஸ்லாம்) பிரிவினர் - 34 ஆகவும் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
பட்டியல் எழுத்தர்: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.5285 + ரூ.3499 சம்பளமாக வழங்கப்படும்.
உதவுபவர் - ரூ.5218 + ரூ.3499/-
காவலர் - ரூ.5218 + ரூ.3499/-
மேலும் படிக்க:படித்த முடித்தவுடன் ஸ்டார் ஹோட்டலில் வேலை.. 100% வேலைவாய்ப்பு பெற்றிட ஏற்பாடு.. தாட்கோ கழகம் முக்கிய அறிவிப்பு