தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் வரும் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது லட்சக்கணக்கானோர் அரசு வேலைக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து தேர்வுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) தனித்தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வெழுதி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக 09.052023 முதல் 13.05.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிங்க : சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி..! அரசு வேலை வழங்கி உதவிய உதயநிதி
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து உரிய தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தேர்வுக்கட்டண விவரம் :
ஒவ்வொரு பாடத்திற்கும் - ரூ. 50
மதிப்பெண் சான்றிதழ் முதலாமாண்டு - ரூ.100
மதிப்பெண் சான்றிதழ் இரண்டாமாண்டு - ரூ.100
பதிவு மற்றும் சேவைக்கட்டணம் – ரூ.15
ஆன்லை பதிவு கட்டணம் - ரூ.70
வரும் 13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.
அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ: https://tnegadge.s3.amazonaws.com/notification/DEE/1682665043.pdf
இதையும் படிங்க : IRCTC இணையதளம் முடங்கியதா..? தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் அவதி