சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த தேதியில் வெளியாகிறது - உண்மையா? பொய்யா?

By Raghupati R  |  First Published May 10, 2023, 3:21 PM IST

சிபிஎஸ்இ 10ம் மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாக போவதாக அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 21ம் தேதி வரையிலும், காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும் தேர்வுகள் நடத்தப்பட்டன. 2023 ஆம் ஆண்டு சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு 21.87 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகளை விரைவில் அறிவிக்கும் என்று தெரிவித்திருந்தது. மாநிலக் கல்வி வாரியத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியான நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது என்று கேள்வி எழுந்தது.

Tap to resize

Latest Videos

இதற்கிடையே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை அதாவது மே 11 வெளியாகும் என்று போலி அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது. இது உண்மையா என்பதை விசாரித்தபோது அதிர்ச்சிகர தகவல் வெளியாகி இருக்கிறது.  இந்த அறிக்கையின்படி சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை அதாவது மே 11 வெளியாகும்.

மேலும், தேர்வு முடிவுகளை குறிப்பிட்ட இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. அது போலியான அறிக்கை என்று தற்போது கூறப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்றும், கூடிய விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..தமிழக காவல்துறையின் எஸ்.ஐ பணியில் சேர விருப்பமா? முழு விபரம்

click me!