உதவி சிறை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாடு சிறைத் துறையில் காலியாக உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆனது வரும் 11 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த தேர்வுக்கு ஏதேனும் ஒரு டிகிரி பட்டம் படித்திருந்தால் போதுமானது ஆகும். அதுமட்டுமின்றி, இந்த தேர்வுக்கான பாடப் பிரிவுகள் பெரும்பாலும் குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஒன்றாக அமைந்துள்ளது.
கல்வித் தகுதி:
பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ. 35, 400 முதல் 1,30,400 வரை
காலியிட விவரங்களை பொறுத்தவரை உதவி சிறை அலுவலர் பணிக்கு ஆண்கள் 54 பேரும், பெண்கள் 5 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவு விண்ணப்பதாரர், 01. 07. 2023 அன்று 18 -32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏனைய பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு இல்லை.
அரசால், அரசு மருத்துவ நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட உதவி அறுவை சிகிச்சை நிபுணர் தரத்திற்கு மேற்பட்ட மருத்துவ அலுவலரிடமிருந்து , உடற்கூறு அளவீடு சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். போதிய கால அவகாசம் இருக்கும் போதே அருகில் உள்ள மருத்துவ அலுவலரிடமிருந்து சான்றிதழ் பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www. tnpsc. gov. in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும், இப்பணியிட விவரங்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ தளம் மூலம் தெரிந்து கொள்ளாலாம்.
இதையும் படிங்க..தமிழக காவல்துறையின் எஸ்.ஐ பணியில் சேர விருப்பமா? முழு விபரம்