இந்தோ - திபெத் எல்லை காவல் படையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தோ - திபெத் எல்லை காவல் படையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அறிவுப்பை உள்துறை அமைச்சகத்தின் இந்தோ- திபெத்திய எல்லை காவல்படை வெளியிட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள 186 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் www.recruitment.itbpolice.nic.inஎன்ற லிங்க் மூலம் ஆன்லைன் முறை மூலம் மட்டுமே ஏற்கப்படும்.
ஆப்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
தகுதி நிபந்தனைகள், ஆன்லைன் விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கான நடைமுறை, தேர்வு மற்றும் அலவன்ஸ்கள் முதலியன பற்றிய விரிவான தகவலுக்கு ITBPP இன் https://drive.google.com/file/d/1v7dZ-konv0ASdWmMfCtyRjqw5dvNgelH/view அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கிளிக் செய்து காணவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
உடல்திறன் தேர்வு (PET), உடல் தர தேர்வு (PST), எழுத்து தேர்வு, திறன் தேர்வு, ஆவணம் மற்றும் விரிவான மருத்துவ தேர்வு (DME) மதிப்புரை மருத்துவ தேர்வு (RME) உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். பழங்குடியின/ பட்டியலின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், பெண்கள் உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.