தமிழக கால்நடை பராமரிப்பு பிரிவில் காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது? விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Nov 18, 2022, 6:27 PM IST

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பிரிவில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பிரிவில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பிரிவில் கால்நடை உதவி மருத்துவருக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியான அறிவிப்பில் கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு 731 இடங்கள் காலியாக உள்ளதாகவும் இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சியின் இந்த புதிய வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:  

Tap to resize

Latest Videos

வயது வரம்பு :

  • அதிகபட்ச வயதாக 32 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதி:

  • 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் B.V.Sc.,பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிங்க: வேளாண் பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்தும் திட்டம்... பயன்பெறுவது எப்படி? வேளாண்துறை அமைச்சர் விளக்கம்!!

தேர்வு செய்யப்படும் முறை:

  • இப்பணிக்குக் கணினி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

  • உதவி கால்நடை மருத்துவர் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி-யில் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: 

  • விண்ணப்பிக்கப் பதிவு கட்டணமாக ரூ.150/- மற்றும் தேர்வு கட்டணமாக ரூ100/- ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி:

https://www.tnpsc.gov.in/English/Notification.aspx

இதையும் படிங்க: அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி நோக்கி கிளம்பிவிட்டது..! ஓபிஎஸ்,டிடிவி இணைப்பு காலம் பதில் சொல்லும்- செல்லூர் ராஜூ

முக்கிய தேதிகள்: 

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி

  • 17.12.2022

விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான தேதி

  • 22.12.2022 - 24.12.2022.

கணினி வழி தேர்வு நடைபெறும் தேதி

  • 15.03.2022.
click me!