DRDO-வில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Nov 18, 2022, 4:39 PM IST

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)-ல் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)-ல் காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஆயிரத்து 61 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி குறித்த முழு விவரம்: 

Tap to resize

Latest Videos

பதவிகள்:

  • Junior Translation Officer
  • Stenographer Grade-I(English)
  • Stenographer Grade-II(English)
  • Administrative Assistant(English/Hindi)
  • Store Assistant 'A' (Hindi/English)
  • Security Assistant 'A' (Hindi/English)
  • Security Assistant 'A'
  • Vehicle Operator'A'
  • Fireman/Fire Engine Driver

1. Junior Translation Officer பணிக்கான விவரம்:

தகுதி: 

  • ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்று ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கும் மொழி பெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்:

  • மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 

  • 30க்குள் இருக்க வேண்டும்.

2. Stenographer Grade-I(English) பணிக்கான விவரம்:

தகுதி: 

  • ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்:

  • மாதம் ரூ.25,500 - 81,100

வயதுவரம்பு: 

  • 30க்குள் இருக்க வேண்டும்.

இதையும்  படிங்க: தீவிரவாதத்தைவிட ஆபத்தானது என்ன? எந்த மதத்துடனும் தீவிரவாதத்தை தொடர்புபடுத்தக்கூடாது: அமித் ஷா கருத்து

3. Stenographer Grade-II(English) பணிக்கான விவரம்:

தகுதி: 

  • பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: 

  • மாதம் ரூ.25,500 - 81,100

வயதுவரம்பு: 

  • 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

4. Administrative Assistant(English/Hindi) பணிக்கான விவரம்:

தகுதி: 

  • பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 

ஊதியம்:

  • மாதம் ரூ.19,900 - 81,100

வயதுவரம்பு: 

  • 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். 

5. Store Assistant 'A' (Hindi/English) பணிக்கான விவரம்:

தகுதி:

  • பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஹிந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அடிக்கும் திறன் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

  • மாதம் 19,900 - 63,200

வயதுவரம்பு: 

  • 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

இதையும்  படிங்க: பிரதமர் மோடி நாளை அருணாச்சலப் பிரதேசம், உ.பி. பயணம்

6. Security Assistant 'A' பணிக்கான விவரம்:

தகுதி: 

  • பிளஸ் 2 தேர்ச்சியுடன் நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

  • மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 

  • 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

7. Vehicle Operator'A' பணிக்கான விவரம்:

தகுதி: 

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

  • மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 

  • 27க்குள் இருக்க வேண்டும்.

8. Fireman/Fire Engine Driver பணிக்கான விவரம்:

தகுதி: 

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம், நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

  • மாதம் ரூ.19,900 - 63,200

வயதுவரம்பு: 

  • 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

இதையும்  படிங்க: ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை செயல்படுத்தவில்லை: நிரூபித்தால் பதவி விலகுகிறேன்! கேரள ஆளுநர் சவால்

தேர்வு செய்யப்படும் முறை: 

  • DRDO-ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.

முதல் கட்ட தேர்வு நடைபெறும் இடம்: 

  • தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர்

விண்ணப்பக் கட்டணம்: 

  • ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 
  • எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: 

  • www.drdo.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 

  • 7.12.2022
click me!