சொந்த வீடு வாங்கும் கனவில் இருப்போர் வங்கியில் கடன் பெற வேண்டும் அல்லது சுயமாக சேர்த்து வைத்த பணத்தில் வீடு வாங்க வேண்டும். இதுதான் உலகளாவிய நிலையாக இருந்து வருகிறது.
சொந்த வீடு வாங்கும் கனவில் இருப்போர் வங்கியில் கடன் பெற வேண்டும் அல்லது சுயமாக சேர்த்து வைத்த பணத்தில் வீடு வாங்க வேண்டும். இதுதான் உலகளாவிய நிலையாக இருந்து வருகிறது.
ஆனால், சொந்த வீடு வாங்கு விரும்புவோர், தர்பூசணி, வெள்ளைப்பூண்டு, பீச்பழம், உள்ளிட்ட பழங்களைக் கொடுத்துவிட்டு அதன் மதிப்புக்கு வீடு வாங்கலாம் என்ற திட்டம் வந்துள்ளது. எங்கு தெரியுமா..! நம்முடைய அண்டை நாடான சீனாவில்தான் இந்த வித்தியாசமான பண்டமாற்று திட்டத்தை கொண்டுவந்துள்ளனர்.
2023ம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் விலை பேரல் 45 டாலராக வீழ்ச்சி அடையும்: ஆய்வில் தகவல்
வீடு வாங்குவோர் பணத்துக்குப் பதிலாக பழங்கள், காய்கறிகள், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை மதிப்புக்கு ஏற்றார்போல் கொடுத்துவிட்டு வீட்டைச் சொந்தமாக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
புதிய வீடுகளை மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காக பல நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கமே, சீனாவில் கடந்த ஓர் ஆண்டாக ரியல் எஸ்டேட் துறை படுத்துவிட்டது, வீடு விற்பனையோ அல்லது நில விற்பனையோ படுமோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. ரியல் எஸ்டேட் துறையை ஊக்கப்படுத்தவும், மக்களை வீடு வாங்க உற்சாகப்படுத்தவும் இந்தத் திட்டத்தை நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் சரிந்தது: இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை குறையுமா?
இந்தத் திட்டத்தின்படி, வீடு வாங்க விரும்புவோர், குறிப்பிட்ட தொகையை சீனாவின் யுவான் பணத்திலும், மற்றவற்றை காய்கறிகள், பழங்களிலும் வழங்கலாம். அதாவது, ரூ.22 லட்சம் அடிப்படை விலைக்கு பீச் பழத்தை(ஒருவகையான ஆப்பிள்) பேமெண்டாக வழங்கலாம், மற்ற தொகையை யுவானாக வழங்கலாம் என சீனாவின் உக்சி நகரில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் கடந்த வாரம் விளம்பரம் செய்திருந்தது.
கடந்த மே மாதம் மத்திய சீனாவில் உள்ள ஒரு நிறுவனம் வீடு விற்பனை குறித்து 16 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம், விளம்பரம் செய்தது. அந்த விளம்பரத்தில் வீடு வாங்க விரும்புவோர் டவுன்பேமெண்ட் தொகைக்கு ஈடாக வெள்ளைப்பூண்டு வழங்கலாம் என அறிவித்திருந்தது.
TDS விதி,30% வரியால் பீதி: இந்தியாவில் கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் 80% சரிந்தது
சீனாவின் குயி மாகாணத்தில் வெள்ளைப்பூண்டு பெரும்பான்மையாக விளைகிறது என்பதால், இந்த விளம்பரத்தை அறிவித்திருந்தது. 30 வீடுகளை விற்பனை செய்து, 568 டன் வெள்ளைப்பூண்டு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
நான்ஜிங் நகரில் உள்ள ஒரு ரியல்எஸ்டேட் நிறுவனம், விவசாயிகளிடம் இருந்து 5டன் தர்பூசணிப் பழத்தை டவுன்பேமெண்ட்டாக பெற்றுக்கொண்டு வீடு விற்பனை செய்துள்ளது. சீனாவின் ஒரு லட்சம் யுவானுக்கு ஈடாக 5 டன் பழங்களைப் பெற்றுக்கொண்டு வீடுகளை விற்பனை செய்துள்ளது அந்த நிறுவனம். வீடு விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியதையடுத்து, தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் படிப்படியாக விளம்பரங்ளை குறைத்து வருகிறார்கள், சில நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.
போதும்டாசாமி! கிரிப்டோகரன்ஸி வர்த்தகம், டெபாசிட், திரும்பப்பெறுதலை நிறுத்திய வால்ட் நிறுவனம்
நான்ஜிங் நகரைச் சேர்ந்த ஒரு ரியல்எஸ்டேட் நிறுவனம் கூறுகையில் “ பண்டமாற்றுக்கு வீடு விற்பனை திட்டத்தை நிறுத்திவிட்டோம். சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட விளம்பரங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டோம்” எனத் தெரிவித்துள்ளது.