உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல் அறை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
சிலர் எப்போதுமே ஆடம்பர விஷயங்களை விரும்புவார்கள். பணம் என்பது அவர்களுக்கு பெரிய பொருட்டாக இருக்காது. எப்போதும் ஆடம்பர பொருட்கள், ஆடம்பர பயணத்தை விரும்புவார்கள். மேலும் தங்களின், பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்காக விலையுயர்ந்த ஹோட்டல் அறைகளை தேர்வு செய்வார்கள். எனவே, உங்களின் அடுத்த ஆடம்பரமான விடுமுறையை நீங்கள் தேடுகிறீர்கள் மற்றும் பணம் உங்களுக்கு ஒரு பொருளல்ல என்றால், உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல் அறை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல் நிலத்தில் அல்ல, மாறாக தண்ணீருக்கு அடியில் Lover's Deep என்ற நீர்மூழ்கிக் கப்பலில் உள்ளது, அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லையில் கிழக்கு கரீபியன் கடலில் மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள தீவு நாடான செயின்ட் லூசியாவில் இது உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
The Lover's Deep St. Lucia Submarine - The Underwater Hotel உலகின் மிக விலையுயர்ந்த ஹோட்டல் ஆகும். ஒரு இரவுக்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டால் நிச்சயமாக அதிர்ந்து போவீர்கள். செயின்ட் லூசியா கடற்கரையில் உள்ள கடலோரப் பாறைகளுக்கு அருகில் அல்லது செங்கடலில் மூழ்கிய போர்க்கப்பலுக்கு அருகில் ஹோட்டலை நிறுத்தலாம்.
அழகான கடல்வாழ் உயிரினங்களுக்கு மத்தியில் கடலின் அமைதியான நீல வண்ணங்கள் மற்றும் தங்களுடைய சொந்த நீர்மூழ்கிக் கப்பலின் நேர்த்தியான உட்புறங்களில் ஒரு இரவுக்கு $292,000 செலவழிக்க வேண்டும். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2,43,06,518 செலவழிக்க முடியும். ஒரு இரவுக்கான அறையின் விலையானது, மிகவும் விலையுயர்ந்த SUV, புதிய BMW XM இன் ஆரம்ப விலை 159,995 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
மினி பார், இரு நபர் கழிப்பறை மற்றும் வசதியான இரட்டை படுக்கை உட்பட ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கடலின் காட்சிகளை வழங்குகிறது. இந்த நீர் மூழ்கி கப்பிலில் பயணிக்க விரும்பினால் கரீபியன் தீவான செயின்ட் லூசியாவில் தான் நீங்கள் ஏற வேண்டும்.
கேப்டன், செஃப் மற்றும் பெர்சனல் பட்லர் ஆகியோர் லவர்ஸ் டீப்பில் உள்ள மூன்று பணியாளர்கள் ஆவர், மேலும் அவர்கள் அனைவரும் பார்வையாளர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக கப்பலின் எதிர் முனையில் தனித்தனி, ஒலிப்புகா குடியிருப்புகளில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..