சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் தற்போது 8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்த வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் மாறக்கூடியது.
சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்தியாவில் பெண் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கான பிரபலமான சேமிப்பு திட்டமாக உள்ளது. இது அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட , வரி இல்லாத வருமானத்தை வழங்குகிறது. இந்திய பெண் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டதே இந்த சேமிப்பு திட்டம். பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளுக்காக மாதாந்திர அல்லது வருடாந்திர அடிப்படையில் செய்யலாம்.
சுகன்யா சம்ரிதி கணக்கு வட்டி விகிதம்
undefined
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் தற்போது 8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்த வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் மாறக்கூடியது. ஒவ்வொரு 3 மாதங்களுக்க்கு ஒருமுறை மத்திய அரசு சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
உயர் கல்விக்க்கு உதவும் சுகன்யா சம்ரிதி திட்டம்
பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தை பிறந்த உடனேயே சுகன்யா சம்ரிதி கணக்கில் முதலீடு செய்யத் தொடங்கினால், பெண் குழந்தைக்கு 14 வயது வரை அதில் ஒருவர் டெபாசிட் செய்யலாம். அந்த பெண் குழந்தைக்கு 18 வயது ஆனவுடன் அந்த பெண்ணின் உயர் கல்விக்கோ அல்லது திருமணத்திற்கோ பணத்தை திரும்ப பெறலாம், ஆனால் முந்தைய நிதியாண்டின் முடிவில் கணக்கில் உள்ள தொகையில் 50% மட்டுமே திரும்பப் பெறப்படும்.
பெற்றோர்கள் தங்கள் மகள்களின் கல்விக்காக சேமிப்பதற்கு சுகன்யா சம்ரிதி திட்டம் சிறந்தது என்று நிதி வல்லுநர்கள் கூறுகின்றனர், ஏனெனில் முதலீட்டு எல்லை குழந்தை பட்டப்படிப்பு மற்றும் உயர் கல்வியைத் தொடரும். ஆனால் உங்கள் மகளுக்கு 4-5 வயதுக்கு மேல் இருக்கும் போது நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்தால், உங்கள் பெண் குழந்தையின் உயர் படிப்புக்கு நிதியளிக்கும் இலக்கை அடையாமல் போகலாம்.
ஒரு நபர் பதினைந்து ஆண்டுகளுக்கு சுகன்யா சம்ரிதி ஜோஜனா கணக்கில் 12 தவணைகளில் ஆண்டுக்கு 1.5 லட்சம் அல்லது மாதத்திற்கு ₹12,500 முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 8% வட்டி விகிதத்தின் அடிப்படையில், அந்த பெண்ணுக்கு 21 வயதாகும்போது, முதிர்ச்சியின் போது முழு பணத்தை திரும்பப் பெறுவதற்கு முதலீட்டாளர் முடிவு செய்தால், இந்த திட்டத்தின் முதிர்வுத் தொகை சுமார் ₹63,79,634 ஆக இருக்கும்.
வரி விதிப்பு விதிகள்
சுகன்யா சம்ரிதி திட்டத்தில் முதலீடு செய்யப்படும் டெபாசிட்கள் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ₹ 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற தகுதியுடையவை. கணக்கின் மூலம் பெறப்படும் வட்டித் தொகை, முதிர்வுத் தொகை ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படாது. எனவே பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் தங்கள் குழந்தையின் உயர் கல்வியை தங்கு தடையின்றி தொடர இது உதவும்.