woke mind :நெட்பிளிக்ஸில் மனித உரிமை, சமூக நீதிக்கான குரல்கள் கூடுதலாக இருந்ததால்தான் அதிலிருந்து வாடிக்கையாளர்கள் வெளியேறினர் என்று டெஸ்ஸா நிறுவனர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
நெட்பிளிக்ஸில் மனித உரிமை, சமூக நீதிக்கான குரல்கள் கூடுதலாக இருந்ததால்தான் அதிலிருந்து வாடிக்கையாளர்கள் வெளியேறினர் என்று டெஸ்ஸா நிறுவனர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.இதற்கு தி காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர் அக்னிஹோத்ரியும் ஒத்துஊதி ஜால்ரா அடித்துள்ளார்.
2 லட்சம் வாடிக்கையாளர்கள்
2022 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து 2 லட்சம் வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தாவை ரத்து செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டதையடுத்து, அமெரிக்க பங்குச்சந்தையில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 25 சதவீதம் சரிந்தன. கடந்த 10 ஆண்டுகளில் நெட்பிளிக்ஸ் மிகப்பெரிய அளவில் வாடிக்கையார்களை இழந்திருக்கிறது.
சரிவு
2022 முதல் காலாண்டு குறித்த நெட்பிளிக்ஸ் அறிக்கையில், 22.16 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டைவிட சற்றுக் குறைவாகும். இந்தஅறிவிப்பால் பங்குச்சந்தையின் நெட்பிளிக்ஸ் பங்கு மதிப்பு 262 டாலர்களாகச் சரிந்தது.
சமூகநீதி, மனித உரிமை
நெட்பிளிக்ஸிலிருந்து வாடிக்கையாளர்கள் வெளியேறதற்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நெட்பிளிக்ஸில் சமூகநீதி, மனித உரிமைகளுக்கு ஆதரவான குரல்கள்(வைரஸ்) அதிகமானதால்தான் நெட்பிளிக்ஸ் பார்க்க முடியாததாகிவிட்டது” எனத் தெரிவித்திருந்தார்.
இதில் ஆங்கிலத்தில் வோக் மைன்ட்(woke mind) என்று எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார். இதில் வோக் என்ற வார்த்தைக்கு சமூக நீதி, மனித உரிமைகளுக்கு ஆதரவாகப் போராடுபவர்கள், குரல் கொடுப்பவர்கள் எனப் பெரியர்.
விரைவில் சரிவு
எலான் மஸ்க் கருத்தை தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி வரவேவேற்றுள்ளார். காஷ்மீரில் பண்டிட்கள் வெளியேற்றத்தை அடிப்படையாக வைத்து தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வெளிநாடுகளிலும் வெளியானது, இந்தியாவில் சர்ச்சைக்குரிய படமாக மாறியது.
அக்னி ஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கருத்தில் “ சமூகநீதி பேசுபவர்கள், மனித உரிமை பேசம் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதால்தான் அந்த கருத்துக்களைத் தாங்கிய திரைப்படம் எடுக்கப்படுகிறது. நெட்பிளிக்ஸ் இப்படியே சென்றால், விரைவில் அதன் முழு வாடிக்கையாளர்களையும் இழந்தாலும் நான் வியப்படையமாட்டேன். நீண்டகாலத்துக்கு முன்பே என்னை நெட்பிளிக்ஸ் இழந்துவிட்டது. எலான் மஸ்க் ஏதாவது சலுகை செய்வார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.