netflix lost subscribers :உலகின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களின் ஒன்றான நெட்பிளிக்ஸ் கடந்த 100 நாட்களுக்குள் 2 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களின் ஒன்றான நெட்பிளிக்ஸ் கடந்த 100 நாட்களுக்குள் 2 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
2 லட்சம் வாடிக்கையாளர்கள்
undefined
2022 ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து 2 லட்சம் வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தாவை ரத்து செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டதையடுத்து, அமெரிக்க பங்குச்சந்தையில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 25 சதவீதம் சரிந்தன. கடந்த 10 ஆண்டுகளில் நெட்பிளிக்ஸ் மிகப்பெரிய அளவில் வாடிக்கையார்களை இழந்திருக்கிறது.
பங்கு மதிப்புசரிவு
2022 முதல் காலாண்டு குறித்த நெட்பிளிக்ஸ் அறிக்கையில், 22.16 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டைவிட சற்றுக் குறைவாகும். இந்தஅறிவிப்பால் பங்குச்சந்தையின் நெட்பிளிக்ஸ் பங்கு மதிப்பு 262 டாலர்களாகச் சரிந்தது.
காரணம் என்ன
உக்ரைன் மீதான ரஷ்யா தொடுத்தபோரால் ரஷ்யா மீது அமெரி்க்கா பல பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பல நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறின. அதேபோல உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவின் செயலைக் கண்டித்தும் அந்தநாட்டில் நெட்பிளிக்ஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் 7 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துவிட்டதாக நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.
இது தவிர ஏப்ரல் ஜூன் மாதத்தில் கூடுதலாக 2 லட்சம் வாடிக்கையாளர்களை இழப்போம் என்றும் நெட்பிளிக்ஸ் கணித்துள்ளது. இதற்கு காரணம் நெட்பிளிக்ஸ் இனிமேல் ஒரு வாடிக்கையாளர் ஒரு பாஸ்வேர்டை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதை வேறு ஒருவருக்கு வழங்கியது
கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பாலும் நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் குறைவார்கள்.
நெட்பிளிக்ஸுக்குப் போட்டியா டிஸ்னி ஹாட்ஸ்டார், ஆப்பிள், சோனி, ஜியோ, ஜீ என பல்வேறு தளங்கள் வந்துவி்ட்டன. அந்த போட்டியையும் சமாளிக்க வேண்டியுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு 22.20 கோடி வாடிக்கையாளர்கள் சந்தா செலுத்தி வருகிறார்கள். இந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் வைத்திருக்கும் பாஸ்வேர்டை மற்றவர்ளுக்குப் பகிர்கிறார்கள். இதனால் சந்தா செலுத்தாமல் 10 கோடிக்கும் அதிகமானோர் நெட்பிளிக்ஸில் படம் பார்க்கிறார்கள்.
நெட்பிளிக்ஸில் பணம் செலுத்தி படம் சந்தாதாரர்களாக இருப்போர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக பெரிதாக மாறவில்லை. ஆனால், பார்ப்போரின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துள்ளது. இதைத் தடுக்கும் பொருட்டு ஒரு பாஸ்வேர்டை மற்றவர்களுக்கு பகிர்ந்தது கண்டறியப்பட்டால் அபாராதம் விதிக்கப்படும் என்ற விதமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால்தான் வாடிக்கையாளர்களை இழந்துவருகிறது