imf growth projections2022:நடப்புநிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும்: சர்வதேச நிதியம் கணிப்பு

Published : Apr 20, 2022, 02:30 PM IST
imf growth projections2022:நடப்புநிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறையும்: சர்வதேச நிதியம் கணிப்பு

சுருக்கம்

imf growth projections2022 : நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 80 புள்ளிகள் குறைந்து, 8.2 சதவீதமாகக் குறையும் என்று சர்வதேச நிதியம்(ஐஎம்எப்) கணித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 80 புள்ளிகள் குறைந்து, 8.2 சதவீதமாகக் குறையும் என்று சர்வதேச நிதியம்(ஐஎம்எப்) கணித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் போர்

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக பொருட்களின் விலைவாசி உயரும், இதனால் விலைஏற்றத்தினால் மக்கள்நுகர்வு குறையும், நுகர்வு குறையும்போது, உற்பத்தி குறையும் சங்கிலித் தொடர்புபோன்ற பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு வளர்ச்சியைக் குறைக்கும்
உலக பொருளாதார வளர்ச்சி அறிக்கையை சர்வதேச நிதியம் நேற்று வெளியிட்டது.

வளர்ச்சி குறைப்பு

அதில் “ உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும். இது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குகாரணமாகி அனைத்துப் பொருட்களின் விலை உயர்வைத் தூண்டுகிறது. இதனால் உள்நாட்டில் தேவை குறையத் தொடங்கும். 2022ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 0.8 சதவீதமும், ஜப்பானுடைய பொருளாதார வளர்ச்சி 0.9 சதவீதமும் குறையும்” எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கியின் கணிப்பைவிட, ஐபிஎப் கணிப்பு அதிகமாகவே இருக்கிறது. நடப்புநிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்த நிலையில்,  ஐஎம்எப் 8.2 சதவீதமாக வைத்துள்ளது
2023-24ம் நிதியாண்டிலும் சர்வதேச நிதியம், ரிசர்வ் வங்கி இடையே இந்தியாவின் ஜிடிபியை மதிப்பிடுவதில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.

ரிசர்வ் வங்கி

அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாகவும் இருக்கும் என சர்வதேசநிதியம் கூறுகிறது, ஆனால், ரிசர்வ் வங்கி 6.3 சதவீதம் வளரும் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், ஜனவரி மாதம் ஐஎம்எப் வெளியிட்ட கணிப்பில் அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது

2022ம் ஆண்டில் உலகளவில் உற்பத்தி 3.6 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால், முன்பு 4.4 சதவீதம் வரை வளரும் எனக் கணித்திருந்தது. ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர்தான் உலகப் பொருளாதார வளர்ச்சியையும் குறைத்துள்ளது.
உலகப் பொருளாதார வளர்ச்சியும் 2023ம் ஆண்டில் 3.6% இருக்கும் என்றுசர்வதேச நிதியம் கணித்துள்ளது. இது முந்தை கணிப்பைவிட 20புள்ளிகள் குறைவாகும்.

ரஷ்யா உக்ரைன் போரால் உலக நாடுகளின் பொருளதாரத்துக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள், பாதிப்புகள் குறித்து தெளிவான மதிப்பீடு ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், நிச்சயம் மோசமான பாதிப்பு இருக்கத்தான் செய்யும். 2022ம் ஆண்டில் உக்ரைனின் பொருளாதாரம் 35 சதவீதம் வீழ்ச்சி அடையும். போர் விரைவாக முடிந்தாலும்கூட, மக்களின் உயிரிழப்பு, தொழிற்சாலை, கட்டிடங்கள், நிறுவனங்கள் அழிக்கப்பட்டது, மக்களின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டது என பொருளதாரம் இயல்புபாதைக்கு திரும்ப பலஆண்டுகளாகும் “ என தெரிவித்துள்ளது.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!