"SBI-யில் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க வேண்டுமா?" இத படிங்க முதல்ல...!!!

First Published Oct 18, 2016, 2:04 AM IST
Highlights


எஸ்.பி.ஐ. வங்கியின் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ஏ.டி.எம். பயன்பாடுகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 1.66 லட்சம் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. அவற்றில் எஸ்.பி.ஐ. வங்கிக்கென 45 ஆயிரம் மையங்கள் உள்ளது. அனைத்து ஏ.டி.எம். மைய பண பரிவர்த்தனைகளில் 41 சதவீதம் எஸ்.பி.ஐ. கார்டுதாரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், எஸ்.பி.ஐ. வங்கியின் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ஏ.டி.எம். பயன்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

புதிய மாற்றம் குறித்து எஸ்.பி.ஐ. வெளியிட்டுள்ள செய்தியில், எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில் மாதத்திற்கு ரூ.25 ஆயிரத்துக்கும் கீழே வைத்திருப்பவர்கள், எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில், 5 முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் 3 முறையும், இலவசமாக பணம் எடுக்கலாம். அதற்குமேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்த வேண்டுமானால், ஒவ்வொரு முறைக்கும் ஐந்து முதல் 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தங்கள் கணக்கில் குறைந்தபட்கம் 25 ஆயிரம் ரூபாய் வைத்திருப்பவர்களுக்கு மாதத்திற்கு 9 முறை ஏ.டி.எம்.களிலும், 4 முறை வங்கியிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய் இருப்பு வைத்திருந்தால், நாடு முழுவதிலும் உள்ள ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி, எத்தனை முறை வேண்டுமானாலும், பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

click me!