
நெட்பிளிக்ஸில் இலவசமாக சந்தாவாய்ப்பு தேவை என நினைப்போருக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் பல அருமையான சலுகைகளை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட் பெய்ட் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் மூவிஸ், டிவி ஷோக்களை சந்தா செலுத்தாமல் இலவசமாகக் காண முடியும்.
தங்கம் விலை திடீர் உச்சம்: மீண்டும் சவரன் 39ஆயிரத்துக்கு மேல் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏராமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஓடிடி(OTT) செயலிகளுக்கு எந்த ரீசார்ஜும் தேவையில்லை. அமேசான் பிரைம், டிஷ்னி ஹாட்ஸ்டார் விஐபி, ஜியோ பிரைம், நெட்பிளிக்ஸ் மொபைல் சந்தா ஆகியவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஏராளமான படங்களைக் கண்டு ரசிக்கலாம்.
நெட்பிளிக் சந்தாவுடன் ஜியோவின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்
ஜியோ ரூ.399 திட்டம்:
மாதம் தோறும் ரூ.399 ரீசார்ஜ் திட்டம் மூலம் மாதத்துக்கு 75 ஜிபி இலவசம், அதன்பின் 1ஜிபி ரூ.10க்கு ரீசார்ஜ் செய்யலாம். அன்லிமிட்ட் வாய்ஸ் கால், அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் சந்தா இலவசம்
பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் பாய்ந்தது மத்திய அரசு அதிரடி
ரூ.599 திட்டம்
மாதம் ரூ.599 செலுத்தும் திட்டத்தில் மாதம் 100 ஜிபி டேட்டா இலவசம், இது தீர்ந்தவுடன் ஒரு ஜிபி ரூ.10க்கு 200 ஜிபிவரை ரீசார்ஜ் செய்யலாம். வாய்ஸ்கால் இலவசம், தினசரி 100 எஸ்எம்எஸ் இலவசம், கூடுதலாக பேமலி பிளானுக்காக ஜியோ சிம் வழங்கப்படும். அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் சந்தா இலவசம்
ரூ.799 மாத வாடகை
மாதம் ரூ.799 செலுத்தும் இந்த திட்டத்தில் 150 ஜிபி இலவசமாகத் தரப்படும். அதன்பின் ஒரு ஜிபி ரூ.10க்கு ரீசார்ஜில் கிடைக்கும். 200ஜிபி வரை ரோல்ஓவர் டேட்டா கிடைக்கும். கூடுதலாக பேமலி பிளானுக்காக 2 சிம் கார்டுகள் கிடைக்கும். வாய்ஸ்கால் இலவசம், தினசரி 100 எஸ்எம்எஸ் இலவசம். அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் சந்தா இலவசம்
வாடகை வீட்டில் குடியிருப்போர் 18% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டுமா? புதிய விதி என்ன சொல்கிறது
ரூ.999 திட்டம்
இந்த திட்டத்தில் மாதம் 200ஜிபி இலவசம். கூடுதலாக 1 ஜிபி ரீசார்ஜுக்கு ரூ.10. பேமலி பிளானுக்காக 3 சிம் கார்டு, தினசரி இலவச கால், 100 எஸ்எம்எஸ், அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் சந்தா இலவசம்
ரூ.1499 பிளான்
ஜியோவின் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் மாதம் 300 ஜிபி டேட்டா இலவசம். அதன்பின் ஒவ்வொரு ஜிபிக்கும் ரூ.10 கட்டணம், 500 ஜிபிவரை டே்டா ரோல்ஓவர், அமேசான் ப்ரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் சந்தா இலவசம். இது தவிர சர்வதேச அழைப்புகளுக்கு சலுகைகள், இந்தியாவில் தினசரி 100 எஸ்எம்எஸ், இலவச கால்கள் வழங்கப்படும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.